யாரை டிக்கெட் எடுக்க சொல்றே.. கண்டக்டர் முகத்திலேயே குத்தி தாக்கிய 2 போலீஸார்.. பகீர் வீடியோ
அரசு பஸ் கண்டக்டரை 2 போலீஸ்காரர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர்
Recommended Video
நெல்லை: "யாரை பார்த்து டிக்கெட் எடுக்க சொல்றே" என்று அரசு பஸ் கண்டக்டரை 2 போலீஸ்காரர்கள் தாறுமாறாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு விருதாச்சலம் அருகே டிக்கெட் எடுக்க சொல்லி கேட்டதற்கு, போலீஸ்காரர் ஒருவர் கண்டக்டருடன் தகராறு செய்தார். இதனால் 10 கிமீ தூரத்துக்கு கத்தி கத்தி உயிரையே விட்டார் அந்த கண்டக்டர். இப்போது திரும்பவும் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஒரு சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
நெல்லை புது பஸ் ஸ்டேண்ட்டில் குமுளியிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில், ஆயுதப்படைக் காவலர்களான தமிழரசன், மகேஷ் ஆகிய 2 பேரும் ஏறியுள்ளனர். இருவருமே யூனிபார்மில்தான் இருந்தனர்.

வாரண்ட்
எனினும் கண்டக்டர் ரமேஷ், அவர்களிடம் டிக்கெட் எடுக்க சொன்னார். அதற்கு அவர்கள் இருவரும், "நாங்க எதுக்கு டிக்கெட் எடுக்கணும். எங்ககிட்ட இருக்கு.. அதனால டிக்கெட் எடுக்க மாட்டோம்" என்று சொல்லி உள்ளனர்.

வாக்குவாதம்
இதனால் கண்டக்டர், "சரி வாரண்ட்டை எடுத்து காட்டுங்கள்" என்றார். ஆனால் 2 போலீசாரும் அதற்கு மறுத்துள்ளனர். இது கொஞ்ச நேரத்தில் காரசார வாக்குவாதமாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஒரு போலீஸ்காரர், சப்பென கண்டக்டர் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதை கண்டக்டர் உட்பட பஸ்ஸில் இருந்த பயணிகளும் எதிர்பார்க்கவில்லை.

சரமாரி அடி
கண்டக்டர் வாரண்ட்தானே கேட்டார், அதை தர வேண்டியதுதானே என்று சக பயணிகள் கூச்சலிட்டனர். திரும்பவும் 2 போலீஸ்காரர்களும் சேர்ந்து கண்டக்டரை தாறுமாறாக அடித்தனர். அப்போதும் கண்டக்டர், "நான் வாரண்டைத்தானே காட்ட சொன்னேன், என்னை எப்படி அடிக்கலாம்? என்னை ஏன் வாடா போடான்னு சொல்றீங்க?" என்று சொல்லிவிட்டு, டிரைவரிடம் வண்டியை போலீஸ் ஸ்டேஷன் விடுமாறு சொன்னார்.

ரத்தம்
உடனே அந்த 2 போலீஸ்காரர்களும் "எஸ்பி ஆபீசுக்கே வண்டியை விடுங்க.. பார்ப்போம்" என்றனர். 2 போலீசாரும் அடித்ததில், கண்டக்டருக்கு முகம், தலை, நெத்தியெல்லாம் ரத்தம் வழிய ஆரம்பித்துவிட்டது. இதை பஸ்ஸில் இருந்தவர்களும் வீடியோ எடுத்துவிட்டனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் பக்கத்தில் இருந்த மூன்றடைப்பு போலீஸ் ஸ்டேஷனில் பஸ் நிறுத்தப்பட்டது. கண்டக்டரும், டிரைவரும் 2 போலீசார் தாக்கியதாக புகார் அளித்தனர்.

ஜாமீன்
இதை தொடர்ந்து காயமடைந்த கண்டக்டர் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கண்டக்டர் தந்த புகாரின் பேரில் 2 போலீசாரும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில்இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கண்டக்டரை 2 போலீஸ்காரரும் தாக்கிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications