ஏன் ஏமாத்திட்டீங்க.. கூவத்தூர் போய் அவரை மாதிரி.. சேலத்துக்கே போய் எடப்பாடியை சீண்டிய உதயநிதி
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து சேலத்தில் பிரச்சாரம் செய்தார் உதயநிதி
நெல்லை: உதயநிதி ஸ்டாலின் நெல்லையில் இன்று பிரச்சாரம் செய்தார்.. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சவாலையும் விடுத்து சென்றுள்ளார்.
தேர்தல் நெருங்கிவிட்டது.. இந்த முறையும் திமுக பலமான கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.. அதிமுக தனித்து களமிறங்குகிறது.. இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
எனினும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை.. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து விடாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உதயநிதி
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இன்று பிரச்சாரம் செய்ய வந்தார்.. ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் ஆத்தூர் ராணிப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியபோது, வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்து பேசினார்.

வேட்பாளர்கள்
சேலம் மக்களை நம்ப முடியாது.. நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதியில் திமுக வை வெற்றி பெற வைத்தீர்களா? ஏமாத்திட்டீங்களே.. வரப்போகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலாவது வெற்றி பெற செய்யுங்கள்.. அதிமுக ஆட்சியில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசி மட்டும் போடப்பட்டது.. போதிய விழிப்புணர்வையும் அந்த ஆட்சியில் ஏற்படுத்தவில்லை.

கூவத்தூர்
ஆனால், திமுக ஆட்சி அமைந்த 9 மாத காலத்திலேயே 10 கோடி தடுப்பூசி போடப்பட்டு கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது.. அதிமுக, ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு போயிருக்காங்க.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்காரே, 2 நாட்களாக, இந்த ஆட்சி கலைந்து விடும், கலைந்துவிடும் என்று சொல்லி கொண்டிருக்கிறார்.. நாங்க ஒன்னும், அவர் மாதிரி கூவத்தூர் போய் ஆட்சியை பிடிக்கவில்லை... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி.

உதயசூரியன்
ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.. அதுமட்டுமல்லாமல், பெட்ரோல் விலையை 3 ரூபாயை குறைத்து மகளிர்க்கான இலவச பேருந்து வசதிகளை செய்து கொடுத்த தலைவர்... கூடிய சீக்கிரம் பெண்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.. வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications