"ரத்தம் சொட்ட சொட்ட கடிதம்".. கொடுமை செய்த மருமகள்.. துணை போன மகன்.. அப்பா - அம்மாவின் விபரீத முடிவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் உவரியில் குடும்ப பிரச்சினை காரணமாக வயதான தம்பதியினர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலை முயற்சியில் மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது கணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீட்டில் மகன் மற்றும் மருமகள் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தகராறு
திருநெல்வேலி மாவட்டம் உவரியில் உள்ள பரதர் உவரி அந்தோணியார் கோயிலுக்கு வயதான தம்பதியினர் வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்ததாகவும், இதில் மனைவி உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கணவர் அதே கத்தியை கொண்டு தனது கழுத்தையும் அறுத்து கொண்டார்.

விசாரணை
இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த மூதாட்டியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டியின் கணவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை விசாரணையை தொடங்கியது. முதற்கட்டமாக இந்த தம்பதியினர் கொண்டு வந்திருந்த உடமைகளை பரிசோதித்தனர்.

தற்கொலை
அவர்கள் கொண்டுவந்திருந்த பையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த தம்பதியினர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த அந்தோணி பிச்சை, ஜெயலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் மகன் மற்றும் மருமகள் தொல்லை தாங்காததால் அந்தோணியார் கோயிலுக்கு வந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று நினைத்ததாகவும் கடிதத்தில் எழுதி வைத்துள்ளனர்.

மகன், மருமகள் தொல்லை
முன்னதாக வாக்குவாதத்தில் மனைவியை கொலை செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் கடிதம் இந்த சம்பவத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வயதான தம்பதியின் மகனிடம் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். சுமார் 65 வயது மதிக்கத்தக்க வயதான தம்பதியினர் மகன்/மருமகள் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications