Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீண்டாமையா.. அப்படி ஏதும் இல்லவே இல்லை.. பாஞ்சாகுளம் அரசு பள்ளி ஆய்வுக்கு பின் சிஇஓ கபீர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் அரசு ஒன்றிய தொடக்க பள்ளியில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகவும், பட்டியலின மாணவர்கள் தனியே அமர வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் முதன்மை கல்வி அலுவலர் கபீர் இன்று ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில், பள்ளி தொடர்பான புகார் ஆதாரமற்றது என அவர் கூறினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் அருகே பாஞ்சாகுளம் கிராமம் உள்ளது. இங்கு பட்டியலின மக்களுக்கும், இன்னொரு பிரிவு மக்களுக்கும் பிரச்சனை உள்ளது. போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியானது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

தின்பண்டம் வாங்க கடைக்கு சென்ற பள்ளி மாணவர்களுக்கு கடைக்காரர் மகேஷ்வர் கொடுக்க மறுத்ததோடு, இதுதொடர்பாக கிராம கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். இந்த வீடியோ வெளியான நிலையில் தான் பாஞ்சாகுளம் கிராமத்தில் தீண்டாமை உள்ளது தெரியவந்தது. இது சர்ச்சையான நிலையில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மகேஷ்வரன் மற்றும் அவரது உறவினர் ராமச்சந்திர மூர்த்தியையும் கைது செய்தனர். தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை கிராமத்தில் நுழைய தடை விதித்து ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுகள்

தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுகள்

மேலும் கிராமத்தில் உள்ள பள்ளியிலும் பாகுபாடு காட்டப்படுவதாகவும், பட்டியலின மாணவர்கள் தனியே அமரவைக்கப்படுவதாகவும் மாணவர்கள் புகார் செய்தனர். இதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து பள்ளியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு

முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு

இந்நிலையில் தான் இன்று பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி (சிஇஓ) அலுவலர் கபீர் ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால் அவர் மீது முறைப்படியும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். மேலும் குழந்தைகள் நல அலுவலர் சுப்புலட்சுமியும் ஆய்வு செய்தார்.

ஆதாரமற்ற புகார்

ஆதாரமற்ற புகார்

இந்த ஆய்வுக்கு பிறகு சிஇஓ கபீர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‛‛பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பள்ளியில் தனியாக பெஞ்ச், டெஸ்க் இல்லை. இன்றைய விசாரணையின்படி பார்த்தால் புகார் என்பது ஆதாரமற்றது. இதுதொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும்'' என்றார்.

 விஏஓ விடுவிப்பு

விஏஓ விடுவிப்பு

முன்னதாக பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+