வெலவெலத்த வேலூர்.. ஆபாச படத்தை பார்க்க மாட்டியா.. விநோத கணவன் தந்த அதிர்ச்சி.. இப்படியும் நடக்குமா?
வேலூர்: 25 வயது இளம்பெண் தந்த புகாரை கண்டு, போலீசாரும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இதுகுறித்த நடவடிக்கையையும் உடனடியாக துவங்கி உள்ளனர். என்ன நடந்தது வேலூரில்?
2 மாதங்களுக்கு முன்பு, டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரில் ஒரு சம்பவம் நடந்தது.. கடந்த 2020ல் அந்த தம்பதிக்கு திருமணமாகி உள்ளது.. இந்த பெண்ணை ஆபாச படம் பார்க்கும்படி தொடர்ந்து அவரது கணவர் வலியுறுத்துவாராம்.

மறுத்த மனைவி: அதுவும் இல்லாமல், அந்த ஆபாச பட நடிகைகள் அணியும், டிரஸ்களை போலவே, மனைவியையும் அணிய சொல்லி தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.. அந்த படத்தில் உள்ளதைபோலவே, டிரஸ் செய்துகொண்டு, கணவர் முன்னாடி போய் நிற்க வேண்டுமாம்.. இப்படி ஒரு ஆசையை, நீண்ட நாட்களாகவே அந்த கணவர் மனைவி மீது திணித்து வந்துள்ளார்.. இதற்கு மனைவி மறுத்துள்ளார்..
பலமுறை இதற்கு உடன்படாமல் இருந்தாலும், நாளுக்கு நாள் கணவனின் தொல்லை அதிகமாகியிருக்கிறது.. இதனால், ஒரு அளவுக்கு மேல் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனைவி போலீஸுக்கே சென்று கணவர் மீது, புகார் தந்திருந்தார். அதற்கு பிறகு, இந்த வழக்கு விசாரணை என்ன ஆனது என்று தெரியவில்லை.. ஆனால், இந்த சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போதும் இதுபோலவே ஒரு கொடுமை நடந்துள்ளது.. அதுவும் நம்முடைய வேலூரில்.
கையோடு புகார்: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம் எப்போதுமே தவறாமல் நடக்கும்.. அந்தவகையில் நேற்றைய தினமும் நடந்துள்ளது.. இதில் ஏடிஎஸ்பிக்கள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன், கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார்கள்.. அப்போது, 25 வயது பெண் ஒருவரும் இந்த கூட்டத்துக்கு வந்திருந்தார்.
இவர் கணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்.. 25 வயதாகிறது.. கையோடு ஒரு மனுவையும் கொண்டு வந்து, அதிகாரிகளிடம் தந்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆபாச வீடியோ: "எனக்கும் ஆயுதப்படை போலீஸ்காரரான பிரகாஷ் என்பவருக்கும் பெற்றோர் ஏற்பாட்டில் 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இப்போது 9 மாத கைக்குழந்தை உள்ளது. மேலும் 2 மாத கர்ப்பமாக உள்ளேன். என்னுடைய கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அந்த பெண்களுடன் ஆபாசமாக இருந்ததை அவரே செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். அவற்றை பார்க்கும்படி கூறி என்னை சித்ரவதை செய்கிறார்.
மேலும் என்னுடைய பெற்றோரிடம் இருந்து நகை, பணம், சொத்து என வரதட்சணை வாங்கி வரும்படி கூறி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறார். எனது குழந்தையை கொன்று விடும்படியும், 2 மாத கருவை கலைக்கும்படியும் மிரட்டுகிறார்.
அதிரடி விசாரணை: இவற்றை ஏற்காததால் என்னை வீட்டை விட்டு அடித்து விரட்டிவிட்டார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை கண்ட அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்.. அத்துடன், இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளும் விசாரணையை உடனடியாக துவங்கியிருக்கிறார்கள்.
தன்னுடைய ஆபாச படத்தை பார்க்கும்படி, மனைவியிடமே வீடியோவை காட்டி சித்ரவதை செய்த இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications