''அண்ணே எங்க வீட்டுல தண்ணியாவது குடிங்க''.. திக்குமுக்காடிய தினகரன்..!
Recommended Video

நெல்லை: நெற்கட்டும் சேவலுக்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது, அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் அன்பை வெளிப்படுத்திய விதம் அவரை திக்குமுக்காட செய்துவிட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் விழா கடந்த 1-ம் தேதி நெல்லை மாவட்டம் நெற்கட்டும்சேவலில் நடைபெற்றது.
பூலித்தேவன் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சென்றிருந்தனர்.

திருச்சியில் திருமணம்
நேற்று முன் தினம் தலைமை நிலையச் செயலாளர் மனோகரன் இல்ல மணவிழாவை திருச்சியில் காலை நடத்தி வைத்த தினகரன், அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக பயணித்து மாலை நெற்கட்டும் சேவலுக்கு சென்றார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா விமரிசையாக செய்திருந்தார்.

மக்கள் அன்பு
பூலித்தேவன் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு திரும்பிய டிடிவி தினகரன், மாலை நேரமாக இருந்ததால் திறந்த வேனில் நின்று கொண்டு தன்னை வேடிக்கை பார்க்க திரண்டவர்களிடம் கையசைத்தவாறே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் சற்று கூட்டம் அதிகமாக இருந்ததால், உற்சாகமடைந்த தினகரன் டக்கென்று மைக் பிடித்து பேசத்தொடங்கினார்.

தண்ணியாவது குடிங்க
தினகரன் பேசிக்கொண்டிருக்கும் போதே ''அண்ணே எங்க வீட்டுல ஒரு செம்பு தண்ணீயவது குடிங்கண்ணே'' என ஒரு பெண் குரல் கொடுத்தார். உடனே சுற்றியிருந்த பெண்களும் கோரஸ் கொடுக்க, ''சரிம்மா தண்ணீர் கொடுங்க குடிச்சுட்டு போறேன்'' என வழக்கமான தனது டிரேட்மார் சிரிப்புடன் தண்ணீரை வாங்கி அருந்தினார் தினகரன்.

அன்பு இன்னும் இருக்கு
தினகரன் மீது அடிமட்ட தொண்டர்கள் அளவில் இன்னும் நிறைய அன்பும், எதிர்பார்ப்பும் இருக்கிறது என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக அமமுகவினர் கருதுகிறார்கள். தினகரன் மட்டும் சற்று இறங்கி வந்து அனைவரையும் அணுசரித்து செயல்பட்டால் மீண்டும் மீண்டு வரலாம் என்றும் அமமுகவினர் நம்புகிறார்கள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications