திருநெல்வேலியில் அஜாக்கிரதை அரசு பஸ் டிரைவரால்.. அடுத்த நிமிடமே தேடி வந்த எமன்.. என்ன நடந்தது?
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் அருகில் துறையூர் பகுதியில் நான்கு வழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது பாலப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாகச் செல்கின்றன. அந்த சாலையில் இன்று காலை சாலையை கடக்க நின்றுகொண்டிருந்த இரண்டு பேருக்கு கேரள அரசு பஸ் எமனாக மாறி உள்ளது.
சாலையை கடக்கும் போது கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக சாலையில் ஒரு வாகனம் மெதுவாக சென்றால், பின்னால் வரும் வாகனம் அதனை பயன்படுத்தி முன்னேறி செல்ல நினைக்கக்கூடாது. ஏன் திடீரென வேகத்தை குறைத்து இடதுபுறம் வாகனம் திரும்பியது என்பதை கவனிக்க வேண்டும்..மீறி ஏறி சென்றால் விபத்து தான் ஏற்படும். பல விபத்துகளுக்கு இந்த முறை தான் காரணமாக உள்ளது. மக்களின் அஜாக்கிரதை ஒருபுறம் எனில், டிரைவர்களின் அஜாக்கிரதையும் காரணமாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் அருகில் துறையூர் பகுதியில் நான்கு வழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது பாலப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாகச் செல்வதும், பின்னர் அதிவேகமாகச் செல்வதுமாக உள்ளன. இந்த நிலையில், பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு பஸ் ஒன்று இன்று காலையில் கங்கைகொண்டான் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது துறையூர் பாலப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே அந்த பஸ் மிகவும் அஜாக்கிரதையாக வந்தது. அந்த நேரத்தில் சாலையோரத்தில் சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்த இரண்டு பேரின் மீது அந்த பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவர்கள் இருவர் மீதும் பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர்.
கண்முன்னே நடந்த இந்த கோரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேல்கனி, எஸ்ஐ முருகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தவர்கள் கயத்தாறு அருகே அகிலாண்டேஸ்வரபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (26), நாகராஜன் (25) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். வழக்கம் போல் வீட்டிலிருந்து புறப்பட்டு வேலைக்குச் செல்லும் போதுதான் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications