இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் “லம்ப்”பாக வாரி இறைத்த “தலை”.. பலன் கிடைக்குமா?
நெல்லை: நெல்லை லோக்சபா தொகுதியில், யாரும் எதிர்பார்க்காத ஒரு கட்சி தான் அதிகமாக பணப் பட்டுவாடா செய்துள்ளதாம். ஒரு கட்சி சுத்தமாக கையை விட்டு காசை இறக்கவே இல்லை என்கிறார்கள் கரைவேட்டிகள்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 102 லோக்சபா தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த சராசரியாக 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் 64.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திருநெல்வேலி தொகுதியில் 2019இல் 67.22% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 3 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. பரவலாகவே வாக்குப்பதிவு குறைந்துள்ளதற்கு, இந்த தேர்தலில் பணப் புழக்கம் குறைந்தது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஓட்டுக்கு பணம் வழங்குவது குறைந்ததால் மக்கள் வாக்களிக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.
நெல்லை தொகுதி: நெல்லை லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரை பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் புரூஸ் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கினர். நெல்லை தொகுதி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட்டதால் இந்த தொகுதி அனைவரின் கவனத்தையும் பெற்றது.
எனினும், நெல்லை லோக்சபா தொகுதியில் நேற்று நடந்த வாக்குப்பதிவு 64 சதவீதம் தான். நெல்லையில் நல்ல பணப் புழக்கம் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு இந்த முறை பெருத்த ஏமாற்றம் எனக் கூறப்படுகிறது. காரணம், முக்கிய கட்சி இந்த முறை நேரடியாக போட்டியிடவில்லை என்பதால், அக்கட்சி நிர்வாகிகள் சரிவர பணத்தை பட்டுவாடா செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. அப்படி வந்ததும் உள்ளூர் கரைவேட்டிகள் முழுமையாக பிரித்துக் கொடுக்கவில்லையாம்.
கரை வேட்டிகள் அப்செட்: அதேபோல, மற்றொரு கட்சியில் வேட்பாளர் பெரிய அளவில் வசதியானவர் இல்லை என்பதால், அவரால் பணம் இறக்க முடியவில்லை. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாததால் அந்தக் கட்சியின் முக்கிய தலைகளும், பொறுப்பாளரும் காசை இறக்குவதில் ஆர்வம் காட்டவில்லையாம். இதனால், அந்தக் கட்சி தொண்டர்களே பிரச்சாரத்தில் சுணக்கம் காட்டினர்.
ரொம்ப தாராளம்: யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கட்சியின் வேட்பாளர் தான் நெல்லை தொகுதி முழுக்க பரவலாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் காசையே களத்தில் இறக்கவில்லை என்றாலும், வேட்பாளர் தனது சொந்தக் காசை நெல்லை தொகுதிக்குள் தாராளமாகச் செலவு செய்திருக்கிறாராம். ஒரு ஓட்டுக்கு 300 என்ற அளவில் கொடுக்கப்பட்டதாம். வரும் என்று நினைத்த இடத்தில் வரவில்லை. வராது என நினைத்த வேட்பாளர் தந்துள்ளாரே என, "வாக்காளர் உரிமைத் தொகை" கிடைத்த குஷியில் இருக்கிறார்கள் நெல்லை தொகுதி மக்கள்.
தொகுதி முழுக்க பரவலாக பெரும் பணத்தை இறைத்துள்ளதால் தனக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கையில் இருக்கிறாராம் அந்த பிரமுகர். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதுதான், அவர் போட்ட முதலுக்கு பலன் கிடைக்குமா என்பது தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications