நெல்லை கள்ளக்காதலியின் "கண்ணாடி" மாளிகை.. உள்ளே போனதுமே திகைத்த திருநெல்வேலி போலீஸ்.. இந்த பெண்ணா?
நெல்லை: நெல்லை ஹெட் கான்ஸ்டபிள் முருகராஜ் என்பவர், தன்னுடைய கள்ளக்காதலியுடன் சேர்ந்து அடித்த மோசடி குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த மோசடி அம்பலமானதையடுத்து, போலீஸ்காரர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயது முருகராஜ், திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சந்திப்பு போலீஸ் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கள்ளக்காதலி பெயர் வளர்மதி.

தொழிலதிபர்கள்: இருவரும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட பலரையும் மோசடி செய்து வந்துள்ளனர். வளர்மதி, தன்னை டிஆர்ஓ என்றும், டாக்டர் என்றும் சொல்லி, சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை கறந்துள்ளார். என்னுடைய மனைவி ஒரு டிஆர்ஓ, உங்கள் காரியத்தை கனகச்சிதமாக முடித்துவிடுவார் என்று முருகராஜ் சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களிடம சொல்வாராம்.
உடனே வளர்மதியும், டிஆர்ஓ போலவே தன்னுடைய கெட்டப்பையும், தொனியையும் மாற்றி பேசுவாராம்.. இவரது மாடுலேஷனை பார்த்துதான், நிஜமான பெண் அதிகாரி என்று நினைத்து, பலரும் லட்சக்கணக்கில் பணத்தை தந்திருக்கிறார்கள்.. இதுவரை 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களிடம் இந்த ஜோடி பணத்தை பறித்திருக்கிறது.
வளர்மதி பெயரில் 5க்கும் மேற்பட்ட வங்கிகளில் அக்கவுண்ட் துவங்கப்பட்டுள்ளது. 2 வங்கி கணக்குகளில் மட்டுமே கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. சுமார் ரூ.15 கோடிக்கு பணப்பரிவர்த்தனை இவர்களது வங்கி கணக்கில் நடந்துள்ளது.. ஆனால், முழுமையான விவரங்கள் இன்னும் கணக்கிடவில்லை.
கள்ளக்காதல்: இதனிடையே, இந்த கள்ளக்காதல் ஜோடி செய்த அக்கிரமங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து, பொதுமக்களை அதிர வைத்து கொண்டிருக்கின்றன. ஓசூரை சேர்ந்த வளர்மதியை சில வருடங்களுக்கு முன்பு சந்தித்துள்ளார் முருகராஜ்.. இவருடன் நெருக்கமாக பழகுவதற்காகவே, நெல்லையில் வாடகைக்கு எடுத்து, அதில் வளர்மதியை தங்க வைத்திருக்கிறார் முருகராஜ். இதற்கு பிறகுதான் மோசடியில் இறங்கியிருக்கிறார்கள்.
வளர்மதியை நெல்லை சந்திப்பு போலீசார் கைது செய்ததுமே, அவரது வீட்டிற்குள் சென்று அதிரடியாக சோதனையை நடத்தியிருக்கிறார்கள்.. வளர்மதியின் வீட்டிற்குள் நுழைந்ததுமே போலீசார் ஆடிப்போய்விட்டார்களாம்.. ஏராளமான சொத்து ஆவணங்கள் பீரோவில் இருந்திருக்கின்றன.. இந்த ஆவணங்கள் எல்லாமே, வளர்மதியிடமிருந்து முருகராஜிக்கு மாற்றி எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் ஆகும். அந்த ஆவணங்களில் ஓசூரில் மட்டுமே 9 சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஏற்காடு: அதேபோல, வளர்மதிக்காகவே ஒரு கண்ணாடி மாளிகை இருக்கிறதாம்.. அதேபோல, 30 ஏக்கர் தோட்டமும் வளர்மதிக்கு உண்டு. ஆனால், இந்த தோட்டத்தையும், ஏற்காட்டில் உள்ள தோட்டம் உள்ளிட்டவைகளையும், வளர்மதி முருகராஜ் பெயரில் எழுதி கொடுத்ததாக ஆவணங்களையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. எனினும் அந்த ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து முழுமையாக ஆராய்ந்த பிறகே சொத்து விபரங்கள் தெரியவரும் என்கிறார்கள்.
வளர்மதி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்துமே, முருகராஜ் பெயரில் உள்ளவைதான்.. ஆனால் வளர்மதிக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தன என்று தெரியவில்லை.. கைதான ஏட்டு முருகராஜ், வளர்மதியுடன் சேர்ந்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவிட்டிருக்கிறார்..
பரபரப்பு: இவர்களிடம் ஏமாந்த தொழிலதிபர்கள் யார் என்ற லிஸ்ட்டையும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். அதேபோல, இந்த கள்ள ஜோடியின் வங்கி கணக்குகள் எத்தனை உள்ளன? அதில் எவ்வளவு பணம் உள்ளது? மொத்த சொத்துக்கள் எவ்வளவு உள்ளது? என்பது பற்றியெல்லாம் இதுவரை தெரியவில்லை. ஆனால், இந்த மோசடி சம்பவத்தில் பலரும் சிக்கியிருப்பதால், விவகாரம் பெரிதாகும் என்கிறார்கள்.
நிலத்துக்கு பட்டா வாங்கி தருவது, அரசு வேலை வாங்கித்தருவது என லட்சக்கணக்கில் பணம் வாங்கி பலரையும் மோசடி செய்து வந்துள்ளார் வளர்மதி.. அப்படித்தான் சிக்கியிருக்கிறார் சசிக்குமார்.. மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமார்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கி தர வேண்டும் என்பதற்காக வளர்மதியை அணுகியிருக்கிறார்.
வளர்மதி வீடு: அதற்கு 10 லட்சம் ரூபாய் கேட்டாராம் வளர்மதி.. ஆனால், பல மாதம் ஆனபோதும் பட்டாவும் தரவில்லை, பணத்தையும் தரவில்லை.. அதற்கு பிறகுதான் வளர்மதியை பற்றி விசாரித்தபோது, அவர் அரசு அதிகாரியே கிடையாது என்ப தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார் சசிக்குமார்.. பிறகு, இந்த கள்ளக்காதல் ஜோடி மீது சந்தேகம் வலுத்ததால், அதற்கு பிறகே போலீசுக்கு சென்றுள்ளார்.. ஆரம்பத்தில் சாதாரணமாக இந்த கேஸை அணுகிய போலீசாக்கு, வளர்மதி வீட்டிற்கு ரெயிடுக்கு சென்றபோதுதான் விஷயம் புரிந்து அதிர்ந்து விட்டார்களாம்-
மாவட்ட வருவாய் அலுவலர், டாக்டர் என்ற சொல்லிக்கொள்ளும் வளர்மதி, அதற்குரிய மிடுக்குடன்தான் தொழிலதிபர்களிடம் பேசுவாராம். ஏற்கனவே கைதாகியிருந்த நிலையில், மீண்டும் ஒரு மோசடி புகாரால் மறுபடியும் கைதாகி உள்ளார் வளர்மதி... யார் போன் செய்தாலும், பிஆர்ஓ வளர்மதி என்றுதான் ட்ரூ காலரில் வருகிறதாம். இதில்தான் பலர் ஏமாந்திருக்கலாம் என்கிறார்கள் போலீசார். இவரது கொடைக்கானல் எஸ்டேட் பற்றின விவரங்களையும் ஆராய்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications