Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் மாற்று அரசியலா? கவின் பற்றி தவெக மாநாட்டில் விஜய் ஒரு வார்த்தை கூட பேசலையே.. இதுதான் காரணம்?

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை கவின் ஆணவக்கொலை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதுவரை வாய் திறக்காதது கடுமையான விவாதங்களை அக்கட்சியினர் இடையே ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் கூட விஜய் இதை பற்றி பேசவில்லை.

கவின் பற்றி விஜய் பேசுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தவெக அறிக்கையோடு நிறுத்திக்கொண்டதே ஒழிய.. மாநாட்டில் கவின் பற்றி விஜய் எதுவும் பேசவில்லை. நெல்லையில் நிகழ்ந்த ஆணவக் கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலியான கவின், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

paranthur airport

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியைக் கவின் காதலித்து வந்தார். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இவர்களின் காதல், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நீடித்தது.

நெல்லை கவின் ஆணவக்கொலை

ஒரு கட்டத்தில், கவினைச் சந்திக்க அழைத்த சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றார். இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பிறகு, சுர்ஜித் நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி, தந்தை சரவணன் ஆகியோரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது. உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வந்த அவர்கள் இருவரும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டது. அத்துடன், முக்கிய குற்றவாளியான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் கைது செய்யப்படும் வரை கவின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவரது குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.

திமுக எம்பி கனிமொழி ஆறுதல்

தாய் மட்டுமே கைது செய்யப்படாத நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கவினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதைத்தொடர்ந்து, ஆறாவது நாளில் குடும்பத்தினர் சம்மதித்து கவின் உடலைப் பெற்று இறுதிச் சடங்குகளைச் செய்தனர். கடந்த வாரம் கவின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது. இத்த தகனம் நிகழ்வின் இறுதி அஞ்சலியில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ஆணவக் கொலையைக் கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விசிக போன்ற கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவினின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். கவினின் மரணம் மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டு, அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இதற்கிடையே, கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத் தலைவர் தமிழ்வாணனின் கோரிக்கையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திமுக பேசியது - தவெக பேசவில்லை

இப்படி கவின் கொலை விவகாரத்தில் திமுக கண்டனம் செலுத்தவில்லை என்றாலும் கூட நேரில் ஆறுதல் செலுத்தியது. முதல்வரே போன் செய்து பேசி இருக்கிறார். ஆனால் மாற்று அரசியல் என்று பேசும் விஜய் அப்படி செய்யவில்லை. நெல்லை கவின் ஆணவக்கொலை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதுவரை வாய் திறக்காதது கடுமையான விவாதங்களை அக்கட்சியினர் இடையே ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் அறிக்கை தவிர்த்து.. சொந்தமாக விஜய் இன்னமும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆறுதலும் தெரிவிக்கவில்லை. இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. மாற்று அரசியல் என்கிறார்.. அம்பேத்கார், பெரியார் கொள்கை தலைவர்கள் என்கிறார். ஆனால் ஜாதி ஆணவக்கொலைக்கு கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். விஜய் ஒரு பெரிய புள்ளியின் கண்ட்ரோலில் இருக்கிறார். அவர் ஒரு வியூக வகுப்பாளர். அவர்தான் விஜயை இதை பற்றி பேச விடாமல் தடுத்துவிட்டார். இதை எல்லாம் பற்றி பேசினால் தென் மண்டலத்தில் வாக்கு கிடைக்காது என்று தடுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வருகின்றன.

சரியாக சொல்லப்போனால் ஜாதி வாக்குகள் காரணமாக பொதுவாக இந்த விவகாரங்களில் திமுக அதிமுக மௌனமாக இருப்பதாக புகார்கள் வைக்கப்படும். ஆனால் திமுகவே இந்த முறை பேசிவிட்டது. ஆனால் மாற்று அரசியல் என்று பேசும் விஜய் அப்படி செய்யவில்லை. தொடர்ந்து மௌனம் காக்கிறார். நெல்லை கவின் ஆணவக்கொலை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதுவரை வாய் திறக்காதது கடுமையான விவாதங்களை அக்கட்சியினர் இடையே ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+