தனிமையில் இருந்த நண்பரின் மனைவி.. உறவுக்கு அழைத்த அயோக்கியன்.. வர மறுத்ததால் சுடுநீரை ஊற்றிய கொடுமை
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
திருநெல்வேலி: நெல்லையில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. உறவுக்கு அழைத்ததால் கோபமடைந்த பெண் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் அந்தப் பெண் மீது சுடு தண்ணீரை ஊற்றி விட்டார்.
அந்த கொடுமைக்கார ஆசாமியின் பெயர் ராமச்சந்திரன். இவரது குடும்ப நண்பர்தான் லட்சுமணன். லட்சுமணனின் மனைவி பெயர் கலையரசி. 29 வயதான இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தனது தங்கை வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த வீட்டுக்கு அடிக்கடி ராமச்சந்திரன் வந்து போயுள்ளார். அப்போது கலையரசிக்கு ஆறுதல் கூறி பேசுவது வழக்கம் போல. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்தபோது கலையரசி தனியாக இருந்துள்ளார். ராமச்சந்திரனுக்கு சபலம் தட்டி விட்டது. இதனால் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் கோபமடைந்த கலையரசி எழுந்து போகுமாறு சத்தம் போட்டுள்ளார். வர முடியாது என்றும் கூறி விட்டார்.
இதனால் கோபமடைந்த ராமச்சந்திரன் அடுப்படியில் இருந்த சுடு தண்ணீரை எடுத்து கலையரசி மீது ஊற்றி விட்டார். உடலில் கொதி நீர் பட்டதும் துடித்துப் போய் விட்டார் கலையரசி. அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ராமச்சந்திரன் தப்பி ஓடி விட்டார்.
தற்போது மருத்துவமனையில் கலையரசி அனுமதிக்கப்பட்டு உள்ளார். போலீஸார் ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications