பிரிந்து சென்ற மனைவி.. பள்ளி மாணவியிடம் வெங்கடேசன் செய்த வேலை... பதறிய தாய்
திருவள்ளூர்: திருத்தணி அடுத்த வி.கே என் .கண்டிகையில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி கொடுத்த புகாரில் இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வி கே என் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 24. இவருக்கு திருமணமாகி ஐந்து வயதில் குழந்தை உள்ள நிலையில் மனைவி பிரிந்து இவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மகளின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் மாணவியின் தாய் விசாரித்தபோது வெங்கடேசன் என்ற இளைஞர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். மாணவியின் புகாரையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியவாணி தலைமையிலான காவல்துறையினர்இளைஞர் வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருத்தணி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications