மொத்தம் 7 பேர்.. ஃபுல் போதை.. ஏசி பாரில் ரகளை.. கேஷியர் தலையில் பீர் பாட்டிலால் அடி!
பார் கேஷியரை தாக்கிய 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்
Recommended Video
திருவள்ளூர்: மொத்தம் 7 பேர்.. ஃபுல் போதை.. ஏ.சி. பாரில் ரகளை செய்துவிட்டு, கேஷியரை பீர் பாட்டிலால் அடித்து நொறுக்கியும் விட்டு, தப்பி இருக்கிறார்கள். இவர்கள் 7 பேரையும் சிசிடிவி காட்சியின் பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கலெக்டர் ஆபீஸ் பக்கத்தில் ஒரு பார் இயங்கி வருகிறது. அரசு அனுமதி பெற்ற ஏசி பார் இது. இந்த பாரில் அரக்கோணத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று வழக்கம்போல பாலாஜி, மற்றும் பணியாளர்கள் பாரில் பணியில் இருந்தனர். அப்போது அந்த பாருக்கு ஒரு காரில் 7 பேர் தண்ணி அடிக்க வந்தனர்.
குடிபோதையில் இருந்த அவர்கள், "இந்த பாரில் ஏன் பாட்டில் எல்லாம் இவ்ளோ விலைக்கு விற்கறீங்க?" என்று அங்கிருந்த பணியாளர்களை மிரட்டி தகராறு செய்துள்ளனர். அப்போது அதை தடுக்க வந்த கேஷியர் பாலாஜியையும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், திடீரென அங்கு இருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் ஒரே போடாக போட்டார்கள். இதில் மண்டை, கையில் பீர் பாட்டில் கிழித்து ரத்தம் ஊற்றியது.

இதன் பின்னரும் அவர்கள், அந்த பாரில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு, வந்த காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த பாலாஜியை உடன் பணிபுரிந்த பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலாஜியின் கையில் 6 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நடந்த சம்பவம் குறித்து அவர் திருவள்ளூர் நகர போலீசில் புகார் செய்யவும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாரில் தகராறு செய்து அடித்து நொறுக்கி கேஷியரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 7 பேர் யார் என்று அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவானதை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications