நடுரோட்டில் தலையை தூக்கி காட்டிய நாகராஜன்.. அலறி அடித்து பொதுமக்கள் ஓட்டம்!
திருவள்ளூர் அருகே நடுரோட்டில் 7 அடி நீள பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது.
Recommended Video
திருவள்ளூர்: நடுரோட்டில் நாகராஜனை பார்த்ததும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.. அதாவது பாம்பை பார்த்துதான்!
மாதவரம் செங்குன்றம் செல்லும் ஜிஎன்டி ரோடு கொல்கத்தா சாலையில் கணபத்சத்திரம் சாலை சந்திப்பில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இன்று காலை இந்த பங்குக்கு அருகில் ஒரு நல்ல பாம்பு வந்துவிட்டது.

ஊர்ந்து சென்று நடுரோட்டிற்கு வந்துவிட்டது. சுமார் 7 அடி நீளம் இருக்கும். முதலில் அதை யாரும் சரியாக கவனிக்கவில்லை. பிறகு நல்ல பாம்பு திடீரென தனது தலையை தூக்கி படம் எடுத்தபடியே நின்றது.
இதை பார்த்ததும் அந்த வழியாக நடந்தும், வண்டிகளிலும் போய் கொண்டிருந்தவர்களுக்கு திக்கென ஆனது. அலறியடித்து கூச்சலிட்டபடியே விலகி நடந்து ஓடி சென்றுவிட்டனர்.

ஆனால் டூவீலரில் சென்றவர்கள் வண்டியை ஸ்லோ பண்ணினார்கள். பாம்பை கண்டதும் கையெடுத்து கும்பிட்டுவிட்டனர். சிலர், பயத்தில் உறைந்தபடியே கற்பூரம் ஏற்றி கும்பிட ஆரம்பித்துவிட்டனர். மேலும் சிலர் இதனை ஒரு விஷயமாகவே கவனிக்காமல் சென்று கொண்டே இருந்தனர்.
எனினும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த இடத்தில் டிராபிக் ஜாம் ஆனது. போக்குவரத்து போலீசார் வந்துவிட்டு நிலைமையை சமாளித்தனர். உடனடியாக வனத்துறைக்கும் தகவல் அளித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பாம்பை யாருமே பிடிக்க முன் வரவில்லை போல தெரிகிறது. ஒரு மணி நேரம் கழித்து நடுரோட்டில் இருந்த நல்ல பாம்பு மெதுவாக அருகிலுள்ள ஒரு புதருக்குள் ஓடி மறைந்து விட்டது!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications