தொடரும் தற்கொலைகள்.. திருவள்ளூர் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு மரணம்.. என்ன காரணம்? போலீஸ் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே 9ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended Video

    திருவள்ளூர் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு மரணம்

    திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெருமந்தூர் பகுதியில் வசிக்கும் டில்லிபாபு- பேபி தம்பதிகளுக்கு ஸ்ரீலேகா என்ற மகளும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். மகன் தனுஷ், மதுராந்தகம் வில்வநாயகபுரம் அரசு பள்ளியில் படித்து வருகிறார். மகள் ஸ்ரீலேகா 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை வில்வநாயகபுரம் அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், தொடர்ந்து அங்கு படிக்க விருப்பம் இல்லாத காரணத்தால், சொந்த ஊரான பட்டறைபெருமந்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக 9ஆம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மாணவி ஸ்ரீலேகா பள்ளிக்கு சென்று வருவதும் பின்னர் வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் முழு நேரமும் டிவி பார்த்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்த நிலையில், தனக்கு பள்ளி போக விருப்பம் இல்லை என கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

     9th class student hangs herself near Thiruvallur - Police intensive investigation

    இதனிடையே, வழக்கம் போல் அவர்கள் பெற்றோர், கொத்தனார் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது தாயின் புடவையால் ஸ்ரீலேகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் இருந்த அவர் சடலத்தை கீழே இறக்கி. பெற்றோர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் பெற்றோர்களுக்கு தகவல் போலீசாருக்கும் புகார் அளித்த நிலையில் விரைந்து வந்த திருவள்ளூர் தாலுக்கா போலீசார் மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    மாணவி பாடப்பிரிவு மேல் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாணவியின் பெற்றோர் வீட்டு வேலை செய்ய சொல்லி கூறியதால் தற்கொலை செய்துகொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் முதல் கட்ட விசாரணை மேற்கொண்ட போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    பெற்றோர் வீட்டில் இல்லாதபோது, 9ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் திருவள்ளூர் பகுயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+