நோ டென்ஷன்! ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி! ஆனாலும் ஒரு ட்விஸ்ட்! நோட் பண்ணீங்களா?
திருவள்ளூர்: என் மீது ஐயா ராமதாஸுக்கு கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் என பாமக பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசியிருந்தார். மேலும் ராமதாஸ் டென்ஷன் ஆக வேண்டாம். என்ன செய்ய வேண்டுமோ அதை சொல்லுங்கள், மகனாக, கட்சியின் தலைவராக நான் செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மணவாளநகரில் பாமக பொதுக் குழு கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில் என் மீது தவறு இருந்தால் ஐயா ராமதாஸ் மன்னித்து விடுங்கள். என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள், ஒரு மகனாக, கட்சியின் தலைவராக செய்கிறேன்.

ராமதாஸ் எந்த கோபமோ டென்ஷனோ ஆகாமல் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறில்லை. ஐயா மாநில தலைவர் இல்லை. தேசிய தலைவர், கடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி வந்த போது என்ன சொன்னார்?
மூத்த தலைவர்
நாட்டிலேயே மிக மூத்த தலைவர் ராமதாஸ் என அவர் சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஐயா ராமதாஸுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதயத்தில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு பிபி, சுகர் எல்லாம் இருக்கிறது. எனவே அவர் டென்ஷன் ஆக வேண்டாம், கோபப்பட வேண்டாம்.
ஐயா உருவாக்கிய கட்சி
ஐயா இது நீங்கள் உருவாக்கிய கட்சி. உங்கள் கனவை நனவாக்குவோம் என ராமதாஸ் உருக்கமாக பேசியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசுகையில், திருவள்ளூரில் முப்போகம் விளையும் 1200 ஏக்கர் நிலத்தை பறித்து அமெரிக்க நிறுவனத்திற்கு தாரை வார்க்க திமுக அரசு துடிக்கிறது.
திமுகவுக்கு கடும் எதிர்ப்பு
ஏன் அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு தரிசு நிலம் அதிகம் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை ஒதுக்கலாமே! திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. சமூகநீதிக்காக பாமகவை தொடங்கிய ராமதாஸ், பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை
சமூகநீதி பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை. சமூகநீதியின் துரோகி திமுக. 2026 ஆம் ஆண்டு பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமகதான். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
இறுதி மூச்சு
எனது இறுதி மூச்சு இருக்கும் வரை நான்தான் பாமக தலைவர் என ராமதாஸ் கூறியிருந்த நிலையில் பேச்சு வாக்கில் "மகனாக, கட்சியின் தலைவராக" என அன்புமணி பொடி வைத்து பேசியுள்ளதை கவனித்தீர்களா?
தலைவர் பதவி கிடையாது
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அன்புமணிக்கு, தலைவர் பதவி கொடுக்கிறேன் என சொன்னேன். ஆனால் மைக்கை வீசி அடிப்பது, தாய் மீது பாட்டிலால் அடிப்பது உள்ளிட்ட அன்புமணியின் செயல்பாடுகளை ப பார்க்கும் போது எனது மூச்சு காற்று இருக்கும் வரை அவருக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன்.
பிபி எகிறுது
எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்த பொறுப்பிற்கும், அரசியலுக்கும் வரக் கூடாது என்று கட்சி ஆரம்பிக்கும் போது நான் சொன்னேன். ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை. அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது.
மத்திய அமைச்சர்
கட்சி நிர்வாகிகள் சொன்னதால் 35 வயதில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தேன். உலக அளவில் அன்புமணி விருது வாங்கினார். தற்போது தந்தையிடம் விருது வாங்க முடியாமல் இருக்கிறார். தந்தை, தாயை மதிக்க வேண்டும். அதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது.
96 கிராமங்கள்
தனி ஒரு நபராக 96 ஆயிரம் கிராமங்களுக்கு இரவு, பகலாக சென்று நான் பட்டபாடு சொல்லி மாளாது. "100 ஆண்டுகள் இருப்பீங்க" என சொல்லிவிட்டு மார்பிலும் முதுகிலும் அன்புமணி ஈட்டியால் என்னை குத்திவிட்டு இருக்கிறார். இதனால் தூக்க மாத்திரை போட்டாலும் எனக்கு தூக்கம் வருவதில்லை. இவ்வாறு ராமதாஸ் உருக்கமாக தெரிவித்திருந்தார். தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு செயல் தலைவராக அன்புமணி தொடரட்டும் என்றும் ஐயா தெரிவித்திருந்தார். ஆனால் அன்புமணியோ மன்னிப்பு கேட்டுவிட்டு "தலைவர்" என்றே தன்னை கூறிக் கொண்டார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications