Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு சொகுசு.. குத்தம்பாக்கத்திலும் வருது! திருவள்ளூர் பஸ் ஸ்டாண்டு எப்போது திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு எந்த அளவுக்கு அனைவருக்கும் வசதியாக இருந்ததோ, அதுபோலவே, குத்தம்பாக்கம் பேருந்து முனையத்திலும், பயணிகளுக்கு எந்தவிதமான சிரமமும் இருக்கக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக இருக்கிறார்கள். அந்தவகையில், குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு எப்போது திறக்கப்படும் என்ற புது தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தின் மேற்கு மாவட்ட மக்களுக்காகவும், கர்நாடகா, கேரளா செல்லும் மக்களுக்காகவும், குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம் தயாராகி வருகிறது.. சுமார் ரூ.350 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் இந்த புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

koyambedu tiruvallur kuthambakkam bus station

குத்தம்பாக்கம்: இதற்காக 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, இந்த நிலத்தில் ரூ.395 கோடி ஐந்து லட்சம் சதுர அடியில், கட்டுமான பணிகளும் கடந்த 4 வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றன.

புறநகர் பஸ்கள், ஆம்னி பஸ்கள் என மாநகர பஸ்கள் அனைத்துமே என ஒரே நேரத்தில் 130 பஸ்களை இங்கு நிறுத்த முடியுமாம்.. எனினும் , இந்த பேருந்து முனையத்திற்கு மாற்று சாலை வசதி இல்லாததால், போக்குவரத்து சிக்கல் எழுந்தது. இதையடுத்து, 7 கிராமங்கள் வழியாக புதிய சாலை அமைக்க நிலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக 2 மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

7 கிராமங்கள்: இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் சொன்னபோது, "திருமழிசை புது நகர் திட்டத்தின் கீழ், இங்கு வெளிவட்ட சாலை - சென்னை பெங்களூரு சாலையை இணைக்கும் வகையில், புதிய லுாப் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோலப்பஞ்சேரி, துக்கானம்பட்டு, உடையவர் கோவில், வரதராஜபுரம், காவல்சேரி, திருமழிசை, கீழ்மணம்பேடு, நெஞ்சேரி, குத்தம்பாக்கம், வெள்ளவேடு, நரசிங்கபுரம், பர்வதராஜபுரம், பழங்சூர் கிராமங்களில், 1,605 ஏக்கர் நிலத்தை, நில தொகுப்பு முறையில் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த நிலத்தை பயன்படுத்தி, 100 அடி அகலத்தில் லுாப் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குத்தம்பாக்கம்: இதனால், குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள கிராமங்களில் போக்குவரத்து வசதி, உள்கட்டமைப்பு மேம்படும்.. மொத்தத்தில் கிளாம்பாக்கம் போல எந்த பிரச்சனையும் குத்தம்பாக்கத்தில் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

குத்தம்பாக்கம்: இந்நிலையில், குத்தம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. இங்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், அவற்றின் திட்ட மதிப்பு, 336 கோடி ரூபாயில் இருந்து, 427 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், பணிகளை விரைந்து முடித்து, மே மாத இறுதியில் பேருந்து நிலையத்தை திறக்கவும், சிஎம்டிஏ அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

மேலும், பிரதான கட்டடத்தில், கூடுதலாக ஒரு தளம் குளிர் சாதன வசதியுடன் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.. கூடுதல் தளத்துடன், 2 கோடி ரூபாயில் சாலை மேம்பாட்டு பணிகள், 10 கோடி ரூபாயில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இதை கருத்தில் வைத்து, பேருந்து நிலைய திட்ட மதிப்பு, 427 கோடி ரூபாயாக திருத்தப்பட்டுள்ளது.

எப்போது திறப்பு:
இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2024 இறுதியிலேயே திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சொன்னார்கள்.. ஆனால், கட்டுமான பணிகள் முடியாத நிலையில், 2025 மார்ச் மாதம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று சிஎம்டிஏ கூறியிருந்தது.. ஆனால், இப்போது 92 சதவீதம் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், மிச்ச பணிகள் இன்னும் முடியவில்லை.. அதனால், வரும் மே மாத இறுதியில் தான் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு இருக்கும் என்கிறார்கள் சிஎம்டிஏ அதிகாரிகள்.

அத்துடன், இந்த புதிய பேருந்து நிலையத்தில், மேற்கு மண்டலங்களுக்கு பேருந்துகள் இயக்குவது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் ஆகியவற்றுடன், சிஎம்டிஏ அதிகாரிகள் பேசி வருவதாகவும், அதேபோல, கர்நாடக போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்து நிறுவனங்களுடனும் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள்..

கிளாம்பாக்கம்:
இதற்கெல்லாம் காரணம், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு போல எதுவும் சொதப்பலாகிவிடக்கூடாது என்பதில் அதிகாரிகள் இப்போதே கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும், ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்கள்.. இந்த தொடர்பு பேருந்து வசதி உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்த பிறகே, குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தை, வரும் மே மாதம் திறக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கிளாம்பாக்கம் வருவதற்கு முன்பு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு அனைத்து பயணிகளுக்குமே மிகப்பெரிய அளவில் வசதியாக இருந்தது.. இதனால், பயணிகள் சிரமமின்றி ஊர்களுக்கு சென்று வந்தனர்.. அதுபோலவே, குத்தம்பாக்கம் பேருந்து முனையமும், பயணிகளுக்கு அனைத்து வகையிலும் பேருதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+