என் மகளின் ஆடை, வாய் எல்லாம் ரத்தம்.. 4ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்.. கண்ணீருடன் தாய் பேட்டி!
திருவள்ளூர்: பள்ளி முடித்து பாட்டி வீட்டிற்குச் சென்ற 4ஆம் வகுப்பு சிறுமியைப் பின்தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளியை இன்னும் கைது செய்யவில்லை என்று தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். என் பிள்ளையை அடித்து வாயெல்லாம் ரத்தம் வர வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் என்று கூறிய அவர், கத்தி முனையில் கொலை செய்துவிடுவேன் என்று இந்திக்கார இளைஞர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி அரசு உதவி பெறும் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜூலை 12ஆம் தேதியன்று பள்ளி முடிந்து நண்பகலில் வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து, சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து தப்பித்து உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமியின் நிலைமைப் பார்த்த பெற்றோர், அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளனர். இதன்பின் போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி நேரடியாகச் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்த ஒரு வாரமாக உள்ள நிலையில், இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் பேசுகையில், என் குழந்தை ரயிலில் தான் பள்ளிக்குச் செல்வார்கள். அன்றைய தினம் பள்ளியில் இருந்து விரைவாக வீட்டிற்கு வந்து விட்டதால், ரயில்வே டிராக் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்ற போது, என் பிள்ளையை ஒருத்தன் தூக்கிட்டுப் போய்விட்டான். பிள்ளையை பலாத்காரம் செய்து அடித்திருக்கிறான்.. அந்த நேரத்தில் அவனுக்கு ஏதோ தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.
அதனைப் பயன்படுத்தி என் பிள்ளை தப்பித்து வந்துவிட்டது. ஆனால் என் பிள்ளையைப் பிடித்து பளாரென்று அடித்திருக்கிறான்.. என் மகள் Uncle.. என்னைய விட்ருங்க uncle.. எனக்கு வலிக்கிது.. அடிக்காதீங்க.. கஷ்டப்படுத்தாதீங்க என்று கேட்டிருக்கிறாள்.. ஆனால் பிள்ளை மீது ஏறி அமர்ந்து, அடித்திருக்கிறான்.. அதன்பின் என் மகளிடம், நீ கத்தினால் பக்கத்திலேயே ஒரு பள்ளம் உள்ளது.. தொண்டையை அறுத்து பள்ளத்தில் போட்ருவேன் என்று மிரட்டி இருக்கிறான்.
இதனால் என் பிள்ளை கொலை செய்துவிடுவானே என்று பயந்து கம்முனு இருந்திருக்கிறாள்.. என் பிள்ளை வாயெல்லாம் ரத்தம்.. மூஞ்சியெல்லாம் பிடித்து அடித்திருக்கிறான்.. ஓடிய போது காலினை பிடித்து இழுத்து சென்றிருக்கிறான்.. ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கிறான்.. கத்தியைக் காட்டி மிரட்டி இருக்கிறான்.. என் மகள் அழுதிருக்கிறாள்.. மீண்டும் என் மகளை பலாத்காரம் செய்திருக்கிறான்..
செருப்பு கூட அணியாமல் ஓடி வந்திருக்கிறாள்.. அந்த நேரத்தில் ஒரு பிள்ளை அந்தப் பக்கம் வந்த போது, அவளையும் கூட்டி வந்திருக்கிறாள்.. வீட்டிற்கு வந்து அம்மா.. அம்மா.. என்னை ஒரு இந்திக்கார பையன் இப்படி செய்துவிட்டான்.. Bad Touch என்று சொல்லிக் கதறினாள்.. அதுக்கு பின் பார்த்தால் என் மகள் உடை எல்லாம் ரத்தம், முகமெல்லாம் ரத்தம்.. பிள்ளையைத் தூக்கிக் கொண்டு இந்திக்கார இளைஞனைத் தேடினோம்..
ஆனால் இல்லை.. என் பிள்ளையை துன்புறுத்தி இருக்கிறான்.. ரயிலில் ஏறிதான் என் பிள்ளை வீட்டிற்கு வருவாள்.. என் மகள் 4வது படிக்கிறாள்.. அவங்க அக்கா நன்றாகப் படிக்கவில்லை என்றால் கூட திட்டும் அளவிற்கு அறிவாக இருப்பாள் சார்.. என் பிள்ளைக்கு இன்னும் அந்த காயம் கூட சரியாகவில்லை.. என் பிள்ளையை கொடுமைப்படுத்திவிட்டான் சார்.. என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications