தண்ணீர் குளம்.. பெண் விஏஓவை ஆபாசமாக திட்டிய திமுக பிரமுகர்.. வலைவீசும் போலீஸ்.. என்ன நடந்தது?
பெண் கிராம நிர்வாக அலுவலரை திமுக பிரமுகர் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்
திருவள்ளூர்: பெண் கிராம நிர்வாக அலுவலரை ஆபாசமாக பேசி, தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக பிரமுகரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் அருகில் உள்ளது தண்ணீர் குளம் என்ற கிராமம்.. இங்கு கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் கஸ்தூரி.. இந்த ஊராட்சியின் தலைவராக இருப்பவர் தேவிகா.
தேவிகாவின் கணவர் பெயர் தயாளன்... இவர் திமுக பிரமுகர்.. கிளை செயலாளராக இருக்கிறார்.. ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் விவகாரத்தில் அடிக்கடி தலையிடுவதாக கூறப்படுகிறது..

தயாளன்
தேவிகா மேற்கொள்ளும் அனைத்து பணியையும், தயாளனே இழுத்து போட்டு செய்வதாகவும், மனைவியை பணி செய்ய விடுவதில்லை, தலையீடுகள் நிறைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் ஒரு பிரச்சனை தண்ணீர் குளத்தில் வெடித்துள்ளது.. சில நாட்களுக்கு முன்பு, கிராம நிர்வாக அலுவலரிடம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இறந்த ஒருவருக்காக இறப்பு சான்றிதழ் வாங்க வேண்டிய தேவை தயாளனுக்கு எழுந்துள்ளது.. அதனால், கிராம நிர்வாக அலுவலர் கஸ்தூரியிடம் கேட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம்
அங்கு ஊராட்சி எழுத்தரான சீனிவாசன் என்பவர் தயாளனின் ஆதரவாளர் என்பதால், அவரும் தயாளன் கேட்ட இறப்பு சான்றிதழுக்கு கஸ்தூரியிடம் பரிந்துரைத்துள்ளார். ஆனால் கஸ்தூரியோ, கர்நாடக மாநிலத்தில் இறந்த ஒருவருக்கு, இந்த கிராமத்தில் இறப்பு சான்றிதழ் எப்படி தர முடியும்? என்று கேட்டு, சான்றிதழ் தர மறுத்து விட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த தயாளன், கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாகவும், கஸ்தூரியை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தகாத வார்த்தைகள்
இதற்கு உடந்தையாக ஊராட்சி எழுத்தர் சீனிவாசனும் இருந்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த கஸ்தூரி, நடந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசில் புகார் தந்துள்ளார்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் நடவடிக்கையை துவங்கினர்.. ஆனால், அதற்குள் திமுக கிளை செயலாளரும், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருமான தயாளன் மற்றும் எழுத்தர் சீனிவாசன் இருவரும் மாயமாகிவிட்டனர்.. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குடும்ப உறுப்பினர்கள்
இப்படி புகார்கள் எழுவது முதல்முறையல்ல.. திருவள்ளூர் மாவட்டத்தில் சமீப காலமாக இந்த பிரச்சனை தலைதூக்கி உள்ளது.. உள்ளாட்சி தேர்தல் மூலம் கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக, அவர்களின் குடும்ப உறுப்பினர்களே நிர்வாகத்தில் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களகேவே உள்ளது.. இப்போது இந்த புகார்கள் அதிகமாகிவிடவும், நேரடியாகவே மாவட்ட கலெக்டர் தலையிட்டுள்ளார்..

அராஜகம்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகள் மட்டுமே ஈடுபட வேண்டும், உள்ளாட்சி பெண் பிரதிநிதியின் கணவர், அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருமே அதிகாரத்தை தவறாக பயன்படுத்திட அனுமதிக்க கூடாது என்று வார்னிங் தந்துள்ளார்.. எனினும், தொடர்ந்து தயாளன் அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications