பொத் பொத் ன்னு விழுதே.. திருவள்ளூரில் திடீர் பரபரப்பு.. பழவேற்காடு ஏரிக்கரையில் என்னங்க இதெல்லாம்?
திருவள்ளூர்: திருவள்ளூர் பழவேற்காடு ஏரிக்கு வலசை பறவைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென இந்த தகவல் வெளியாகி உள்ளது.. என்ன நடந்தது?
சென்னையில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பழவேற்காடு ஏரி. இந்தியாவில் உவர் நீர் கொண்ட 2வது பெரிய உப்பங்கழி இதுவாகும்.. கடல், உப்பங்கழி, சதுப்புநிலம் என வித்தியாசமான சூழல் இங்கே நிலவுவதால்தான், பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

பறவைகள்: இந்த ஏரிக்கு நடுவில் உள்ள நிலம் பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது.. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பிளெமிங்கோ பறவைகள் கூட்டமாக இங்கு வருகின்றன. இதுதவிர, கூழைக்கடா, ஹெரான், கிங்ஃபிஷர், நாரைகள் உள்ளிட்ட பல்வேறு பறவைகளையும் இங்கு நாம் காணலாம்..
இந்நிலையில், பழவேற்காடு ஏரியில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.. கிட்டத்தட்ட 3,000க்கும் மேற்பட்ட அரிய வகை வாத்துகள், உள்ளான்கள் இங்கு இறந்து கிடந்துள்ளன.. அவைகளை பொதுமக்கள் சாக்கு பைகளில் அள்ளி சென்றிருக்கிறார்கள்..
மூட்டைகள்: ஒரு மூட்டையில், 150 முதல், 200 பறவைகள் என இதுவரை, 15 மூட்டைக்கு மேல் இறந்த பறவைகளை அள்ளி சென்றுவிட்டார்களாம்.. அதேபோல, 3,000க்கும் மேற்பட்ட வாத்துகள், உள்ளான்கள் இறந்திருக்கலாம் என்கிறார்கள்.. இந்த பகுதியிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ள மறு கரையிலும் வாத்துகள் இறந்து கிடக்கிறதாம்..
இந்த வாத்துகள் இறக்க காரணம் என்ன என்று தெரியவில்லை. ஆனால், தண்ணீரில் யூரியா போன்ற பொருட்கள் கலந்தால்தான் இப்படியெல்லாம் உயிரிழப்புகள் ஏற்படுமாம்.
பாகங்கள்: இறந்த வாத்துகளின் இரைப்பையில் தங்கும் ரசாயனங்களை அப்புறப்படுத்தி விட்டு, மற்ற பாகங்களை இறைச்சிக்காக பயன்படுத்துகிறார்களாம்.. எனவே, இந்த காரியத்தை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க துவங்கி உள்ளது..
அதுமட்டுமல்ல, சமீப காலமாகவே வனத்துறையினரின் கண்காணிப்பு இங்கு குறைந்துவிட்டதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.
விசாரணை: இதையடுத்து, இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.. விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஏரி நீரில் கலந்ததால் பறவைகள் இறந்திருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை துவங்கி உள்ளன. மற்றொருபுறம், உயிரிழந்த பறவைகளின் உடல் பாகங்கள் மாதிரிகளாக சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.. இந்த ரிப்போர்ட்கள் வந்தால்தான், வாத்துகள் உயிரிழப்புக்கு நிஜ காரணம் தெரியவருமாம்.
இந்த பழவேற்காடு ஏரிக்கு பக்கத்தில்தான், ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையம் உள்ளது.. எனவே, மீனவர்கள் நாளை அதாவது பிப்ரவரி 17ம் தேதி கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆய்வுகள்: விண்வெளி ஆய்வுக்கான செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட், இந்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. அதிநவீன இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்திருக்கிறது.. இந்த செயற்கைக்கோளானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் நாளைக்கு சாயங்காலம் 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால்தான், திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications