எப்பா தம்பிகளே! கொரோனாவுல உங்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான்! அதிமுகவை மறக்கலாமா? இபிஎஸ் கலகல
திருவள்ளூர்: எப்பா தம்பிகளே கொரோனா காலத்தில் ஆல் பாஸ் போட்டது நான்தான், எங்களை நீங்கள் மறக்கலாமா என இளைஞர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலகலப்பாக கேள்வி எழுப்பினார்.
திருவள்ளூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் தேர்வுகளை பற்றி கவலையில் இருந்த பள்ளி மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டு விடிவு காலம் கொடுத்தவன் நான்.

எப்பா தம்பிகளே எங்களை நீங்கள் மறக்கலாம். இப்படி எல்லாமே வாங்கி அனுபவிச்சிட்டு பலனை வேறு இடத்தில் கொடுக்கலாமா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில் கண்ணைத் திறந்தால் கலைந்துவிடும் கனவு போன்றதுதான் திரையுலகம். அதை மக்கள் நம்ப வேண்டாம். அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
எம்ஜிஆரும் நடிகர்தான் இவரும் நடிகர் தானே என பத்திரிகையில் பேட்டி கேட்டனர். அதற்கு நான் எம்ஜிஆரையும் இவரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், எம்ஜிஆர் தெய்வம், நடிக்கும் போதே தன் பணத்தை மக்களுக்காகச் செலவழித்தார்.
தான் இறந்த பின்னரும் தன் சொத்தை காது கேளாதோருக்குக் கொடுத்த தலைவர், உயிர் நீத்த பின்னரும் நன்மை செய்த ஒரே தலைவர் எம்ஜிஆர், நிறைய பேசலாம் வேண்டாம், புதியவர் வரட்டும் பார்க்கலாம்.
ஒரு பிரச்னை வந்தது, 72 நாட்கள் ஆளைக் காணோம். நானெல்லாம் போராட்டம் செய்து 7 முறை சிறை சென்றேன். 51 ஆண்டு கால அரசியலில் 10 தேர்தல்களை சந்தித்தேன், சேவலில் ஜெயித்தேன், கட்சிக்காக உழைக்கிறேன், எவ்வளவு பிரச்னை வந்தாலும் கட்சியைக் காப்பதுதான் தலைவருடைய கடமை. உண்மையைத்தான் பேசுகிறேன். உங்கள் வாக்கு சாதாரணமானது அல்ல. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றால் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள், நாடு காப்பற்றப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புயல், வெள்ளம், வறட்சி என எந்தப் பெரிய இயற்கை பேரிடர்களும் இல்லாத நிலையிலும், இந்த அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. ஆனால், அதிமுக ஆட்சிக்காலத்தில் வறட்சி, புயல், கொரோனா போன்ற சோதனையான நேரங்களில் கூட மக்கள் பாதிக்கப்படாத வகையில் சிறப்பான ஆட்சியைத் தந்தோம். இவ்வாறு எடப்பாடி பேசினார்.
2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் நடத்த முடியாத சூழல் உருவானபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
பள்ளி மாணவர்கள்: 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் எவ்விதத் தேர்வுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டது.
அரியர் மாணவர்கள் (Arrear Students): இதுதான் அப்போது மிகப்பெரிய பேசுபொருளானது. கலை மற்றும் அறிவியல், பொறியியல், மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களில், தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தியிருந்த அனைத்து 'அரியர்' மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக (Except Final Year) அவர் அறிவித்தார்.
"எடப்பாடியார்" என்று மாணவர்கள் அவரை அன்போடு அழைக்கத் தொடங்கினர். சமூக வலைதளங்களில் அவருக்கு "மாணவர்களின் நண்பன்" எனப் பல போஸ்டர்கள் பறந்தன.
நீதிமன்ற வழக்கு: அரியர் மாணவர்களைத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற வைப்பதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மற்றும் சிலர் நீதிமன்றம் சென்றனர். இறுதியில், யுஜிசி (UGC) விதிகளின்படி தேர்வுகள் அல்லது மதிப்பீடுகள் நடத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications