Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹே மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே".. சான்ஸே இல்லியே.. குழம்பிய போலீஸ்.. காற்றில் கலந்த "பச்சைக்கிளி"

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: 2 நாட்களுக்கு முன்பு திருவள்ளூரில் நடந்த தற்கொலை சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.. இதுக்கெல்லாமா? தற்கொலை செய்து கொள்வது? அதுவும் இந்த வயசிலேயா? என்கிற கேள்விகள் வலம்வந்தபடியே உள்ளன.. 2 நாட்களாகவே, சில ரீல்ஸ் வீடியோக்கள், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. யார் இந்த குழந்தை?

திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்த தம்பதி கிருஷ்ணமூர்த்தி- கற்பகம்.. இவர்களுக்கு ஒரு மகனும், 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது பிரதிக்‌ஷா என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பிரதிக்ஷா, அருகில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டில், பக்கத்து வீட்டு தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்... அப்போது கிருஷ்ணமூர்த்தியும், கற்பகமும் அங்கு வந்தனர்.

 பெட்ரூம் ஜன்னல்

பெட்ரூம் ஜன்னல்

பிரதிக்ஷாவிடம், "விளையாடியது போதும்... வீட்டுக்கு போய் படி" என்று சொல்லி உள்ளனர்.. அத்துடன், தாங்கள் வெளியில் செல்வதாகவும், பைக்கில் பெட்ரோல் போட்டுவிட்டு, கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து விடுவதாகவும் சொல்லி, வீட்டின் சாவியையும் பிரதிக்ஷாவிடம் கொடுத்துள்ளனர்.. தங்களுடன் மகனையும் அழைத்துக் கொண்டு, பைக்கில் சென்றுள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து பெற்றோர் வீட்டுக்கு வந்தார்கள்.. அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது... கிருஷ்ணமூர்த்தி கதவை தட்டினார்... பலமுறை தட்டிப்பார்த்தும் கதவு திறக்கவில்லை. இதனால் பயந்து போன கிருஷ்ணமூர்த்தி பெட்ரூம் ஜன்னல் கதவை உடைத்தார்.

 தூக்கு

தூக்கு

அப்போது பிரதிக்ஷா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்துபோனார்.. சிறிய அளவிலான, வெள்ளை கலர் டவலால், தூக்கு போட்டுக் கொண்டுள்ளார்.. இதனால், அலறிதுடித்த கிருஷ்ணமூர்த்தி, மேல்புற கூரையை பிரித்து வீட்டிற்குள் இறங்கி, அதற்கு பிறகு, பெட்ரூம் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அப்போது சிறுமிக்கு உயிர் இருந்தது... எனவே, உடனடியாக தூக்கிக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஓடினார்.. வழியெல்லாம் பிரதிக்ஷா உயிருக்கு போராடிக்கொண்டேயிருந்தார்..

 தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சையும் தந்தனர்.. ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ போராடியும், சிகிச்சை பலனளிக்காமல் பிரதிக்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, திருவள்ளூர் போலீசார் இதுகுறித்து விசாரணையை துவங்கினர்.. முதலில் இந்த சம்பவம் பலருக்குமே அதிர்ச்சியை தந்தது.. 9 வயது சிறுமி எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்? என்ற குழப்பம்தான் போலீசாருக்கும் எழுந்தது.. அதனால், பிரதிக்ஷா தூக்கில் தொங்கிய ரூமுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்...

 பெட்ரூம்

பெட்ரூம்

வீட்டின் பெட்ரூமில் உள்ள கட்டில் மெத்தையின்மீது, சிறிய ஸ்டூலை எடுத்து போட்டு, அதன்மீது ஏறியிருக்கிறார் பிரதிக்ஷா.. அதற்கு பிறகு, டவலை எடுத்து, ஜன்னல் கம்பியில் கட்டிவிட்டு, அதில் தூக்குப்போட்டு, அதற்கு பிறகு, ஸ்டூலில் இருந்து கீழே குதித்துள்ளார். ஆனால், அந்த துண்டு கழுத்தை முழுவதும் நெரிக்கவில்லை.. அதனால், தூக்கில் தொங்கியபடியே கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கும் மேலாக உயிருக்கு போராடியிருக்கிறார்.. டாக்டர்கள் ஐசியூவில் சேர்த்து, சிகிச்சை தந்து, அவரை பிழைக்க வைக்க கடுமையாக முயற்சித்தும்கூட, காப்பாற்ற முடியாமல் போய்விட்டது...

INSTA குயின்

INSTA குயின்

"விளையாடியது போதும், புக் எடுத்து படி" என்று பெற்றோர் பலமுறை பிரதிக்ஷாவை திட்டியுள்ளார்கள் என்றாலும், அன்றைய தினம், அவரது தோழிகள் முன்பு திட்டிவிட்டார்களாம்.. அதனாலயே அவர் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.. இந்த சிறுமியின் தற்கொலை சம்பவம் நடந்த 2 நாட்கள் ஆகியும் இன்னும் இணையவாசிகள் மனதை விட்டு நீங்கவில்லை.. காரணம் இவர் ஒரு இன்ஸ்டா குயின் ஆவார்.. இன்ஸ்டாவில் தனக்கென ஒரு ஐடியை கிரியேட் செய்து, ஏகப்பட்ட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து பதிவேற்றி வந்தவர்.. திருவள்ளூர் பகுதியில் இன்ஸ்டா புகழ் என்றாலே அது பிரதிக்‌ஷாதான் என்கிறர்கள்.

எக்ஸ்பிரஷன்

எக்ஸ்பிரஷன்

எந்த பாட்டாக இருந்தாலும் அதற்கேற்றவாறு முகபாவனையை காட்டக்கூடியவர் பிரதிக்‌ஷா.. மென்மையான பாடல்கள் என்றால், அதற்கேற்றவாறு உடலை வளைத்து நளினமாக ஆடுவார்.. முக்கியமாக எக்ஸ்பிரஷன் தான் இவரது பிளஸ் பாயிண்ட்கள்.. கண்ணசைவும் + முக பாவனையாலும்தான் அனைவரையும் கட்டிப்போட்டு வந்துள்ளார்.. 9 வயது குழந்தை என்பதால், எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பாராம்.. பாடல்கள் என்றில்லாமல், காமெடி டயலாக்குகளையும் அதே மாடுலேஷனுடன் பேசுவாராம்.. இதில் அதிக ரசிகர்கள் சேர்ந்தது, பிரதிக்‌ஷாவின் கானா பாடல்களுக்குதான்.. பாடலுக்கேற்றபடி, தலைமுடியை கோதிவிட்டு கொள்வாராம்.. தலையை அப்படியும், இப்படியுமாக சாய்த்து க்யூட்டாக மூவ்மென்ட்ஸ் தருவாராம்.

 ரீல்ஸ்

ரீல்ஸ்

'கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன் கன்பியூஷன் ஆகிறேன்' என்ற பாடலுக்கு, விழியசைவிலேயே ரசிகர் கூட்டத்தை தன் வசமாக்கினார் என்கிறார்கள். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.. குத்துப்பாட்டு, கானா, கிராமிய இசை என ஒவ்வொன்றிலும் அவரது தனித்துவம் வெளிப்பட்டது.. யார் கண்பட்டதோ தெரியவில்லை.. பிரதிக்ஷாவின் ரீல்ஸ் வீடியோக்களை இணையவாசிகள் திரும்ப திரும்ப பார்த்து கலங்கி கொண்டிருக்கிறார்கள்.. "ஹே மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே... அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே... நீ எப்போ வரப்போறே... இனி எப்போ வரப்போறே..."

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+