திருவள்ளூரில் அரசு அதிகாரிக்கு ஆசை.. லலிதாவுடன் சேர்ந்து அசையா சொத்துக்களில் அக்கப்போரு! கோர்ட் செம
திருவள்ளூர்: திருத்தணியைச் சேர்ந்த அருணாச்சலம், அவரது மனைவி லலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. வருவாய் கோட்ட அலுவலராக அருணாச்சலம் இருந்தபோது 1998 - 2007ல் வருமானத்து அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த புகார் எழுந்தது. அரசு ஊழியராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தம்பதிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையை திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் விதித்திருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியை பூர்வீகமாக கொண்டவர் ஏ.அருணாசலம்.. இவருக்கு 70 வயதாகிறது.. இவர் அரசு ஊழியராக கடந்த 1980-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார்.

அடுத்தடுத்து புரமோஷன்
பிறகு பல்வேறு பதவி உயர்வுகள் பெற்றார்.. பல்வேறு பிரிவுகளில் பல இடங்களில் பணிபுரிந்து வந்தார். அந்தவகையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி முசிறி கோட்டாட்சியராக புரமோஷன் பெற்று, 2008, ஏப்ரல் 8 வரை பணிபுரிந்துள்ளார்.
அசையும் சொத்துக்கள் - விசாரணை
இந்நிலையில், தன்னுடைய பெயரிலும், மனைவி லலிதா பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக இவர்மீது புகார் கிளம்பியது. அதாவது, 1998 ஜனவரி 1 முதல், 2007 அக்டோபர் 30 வரையில், அசையும், அசையா சொத்துகள் ரூ.69 லட்சத்துக்கு வாங்கி குவித்துவிட்டாராம்.. இது தொடர்பாக திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரின் சோதனையும், விசாரணையும் மேற்கொண்டு வந்தனர் .. இறுதியில், அருணாசலம் லதா தம்பதி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா வாதிட்டார். அனைத்து விசாரணையின் முடிவில், அருணாசலம், லலிதா ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அசையா சொத்துக்கள்
இதனையடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தீர்ப்பு அளித்தார். அதில், அரசு பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை சேர்த்த முன்னாள் கோட்டாட்சியர் அருணாசலத்துக்கும், அவரது மனைவி லலிதாவுக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், அருணாசலத்துக்கு ரூ.35 லட்சம், லலிதாவுக்கு ரூ.5 லட்சம் என, அபராதமும் விதித்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் கோட்டாட்சியர் மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருவள்ளூர் சிறப்பு நீதிபதி தந்துள்ள இந்த தீர்ப்பு, மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications