ரஞ்சனாவை விடுங்க.. ஃபுல் போதையில் அரசு பஸ் கண்ணாடியை நொறுக்கி அலப்பறை கிளப்பிய குரு: தூக்கிய போலீஸ்!
திருவள்ளூர்: மதுபோதையில், அரசு பேருந்தின் கண்ணாடிகளை கட்டையால் அடித்து உடைத்து அட்டகாசம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கொமக்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். கூலித் தொழிலாளியான இவர் டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, பேரம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கூவம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.

அப்போது, உச்சபட்ச மது போதையில் வந்த குருநாதன், அந்தப் பேருந்தின் குறுக்கே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்தை இங்கிருந்து எடுக்கக் கூடாது என பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து குறுக்கே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை இடிக்காமல் இடது புறமாக பேருந்தை ஓட்டுநர் எடுக்க முயன்றுள்ளார். இதனால், டென்ஷனாகியுள்ளார் குடிமகன் குருநாதன்.
"நான் வண்டியை எடுக்கக்கூடாதுன்னு சொன்னதுக்கு அப்புறமும் வண்டியை எடுக்குறியா.. இரு வர்றேன்.." எனக் கூறிக்கொண்டே, அருகில் கிடந்த கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு சென்று பேருந்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளார் குருநாதன். மேலும், ஓட்டுநர் இருக்கை அருகே இருந்த கண்ணாடி, பின்பக்க கண்ணாடி, பேருந்தின் கதவு கண்ணாடி என அனைத்து கண்ணாடிகளையும் அடித்து உடைத்தார்.
குடிபோதையில் இருந்த குருநாதனின் இந்தச் செயலால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். எங்கே உள்ளே வந்து தங்களையும் கட்டையால் அடித்து விடுவாரா என பயந்துபோய் அமர்ந்திருந்தனர். கட்டையால் அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதை தடுக்கப் போன சிலரையும் கட்டையால் அடித்து விடுவதைப் போல மிரட்டியதால் யாரும் அருகே நெருங்கவில்லை.
இதையடுத்து, பஸ்ஸின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகளையும் குடிமகன் குருநாதன் அடித்து நொறுக்கிய நிலையில், பஸ்ஸில் இருந்த முதியவர்கள், பெண்கள் அலறத் தொடங்கினர். ஒரு இளைஞர் வந்து குருநாதனின் சட்டையைப் பிடித்து இழுத்து கட்டையை பறித்தார். பின்னர், பொதுமக்கள் அந்த நபரை அடித்துத் துவைத்தனர்.
இந்தச் சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட, அது தீயாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளை அடித்து உடைத்த குரு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்தச் சம்பவம், நேற்று முன் தினம் (நவம்பர் 2ஆம் தேதி) நடந்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அரசுப் பேருந்தை நொறுக்கிய குருநாதனை இன்று கைது செய்துள்ளனர்.

நேற்று சென்னையில், போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த மாணவர்களைப் பார்த்து கொதித்தெழுந்த ரஞ்சனா நாச்சியார், பேருந்தை நிறுத்தச் சொல்லி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், படியில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை கடுமையாக திட்டியதோடு தான் போலீஸ் எனக் கூறி அவர்களை தாக்கினார். மேலும், நடத்துனரை நோக்கி ஏக வசனத்தில் பேசி அராஜகத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இன்று ரஞ்சனாவை அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர். இவர் பாஜகவில் பொறுப்பில் இருப்பவர் என்பதும், சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசுப் பேருந்தை நிறுத்தி வாக்குவாதம் செய்த ரஞ்சா கைதான அன்றே, அரசுப் பேருந்து கண்ணாடிகளை உடைத்து தாக்கிய குடிமகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்










Click it and Unblock the Notifications