“என்னய்யா வேலை செஞ்சீங்க”.. பார்த்ததுமே டென்ஷன் ஆன அமைச்சர் நாசர்.. காரை விட்டே இறங்காமல் ரிட்டர்ன்!
திருவள்ளூர் : திருவள்ளூரில் அமைச்சர் நாசர் மருத்துவ முகாமை தொடங்கி வைக்க வந்தபோது, பொதுமக்கள் யாரும் இல்லாததால், கோபமடைந்து அதிகாரிகள், கவுன்சிலர்களை அழைத்து காட்டமாக திட்டிவிட்டு, அங்கிருந்து கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த மருத்துவ முகாமிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் வந்திருந்தாலும், பொதுமக்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைக்க அங்கு வந்த நிலையில், அமைச்சர் வருகையின் போது, மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அமைச்சர் நாசர், காரில் இருந்தபடியே இந்த மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள், திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகளை அழைத்து காட்டமாகப் பேசியதோடு, மருத்துவ முகாமை ரத்து செய்துவிடுங்கள் என்று கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுள்ளார்.
மருத்துவ முகாமிற்கு வந்த அமைச்சர் நாசர், பொதுமக்கள் யாரும் வராததால், சிறப்பு முகாமை ரத்து செய்துவிட்டு காரை விட்டே இறங்காமல் அப்படியே திரும்பிச் சென்ற நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ முகாமிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என 50க்கும் மேற்பட்டோர், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் வந்திருந்த போதிலும், முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தாத காரணத்தால் பொதுமக்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications