அதிகாலையில் துப்பாக்கி சூடு! பொன்னேரி மருத்துவமனை ஊழியர் மீது தீ வைப்பு.. குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் ஊழியர் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பிரகாஷை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். மாதவரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை பிடிக்க சென்றபோது, போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பிரகாஷின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் ராஜேஸ்வரி. நேற்று இரவு பணி முடிந்து வெளியே வந்தபோது, அங்கு வந்த பிரகாஷ் அவர் மீது பெட்ரோல் ஊற்றியதாக கூறப்படுகிறது.

focus- Ponneri Hospital Petrol Attack

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி மீண்டும் மருத்துவமனை வளாகத்துக்குள் ஓடிய நிலையில், அவரை பின்தொடர்ந்து சென்ற பிரகாஷ் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்து ராஜேஸ்வரியை மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜேஸ்வரியை உடனடியாக மீட்ட ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் ராஜேஸ்வரிக்கு சுமார் 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ராஜேஸ்வரி மீது தாக்குதல் நடத்திய நபர் பிரகாஷ் என்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பிரகாஷை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர் மாதவரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது பிரகாஷை பிடிக்க முயன்றபோது, அவர் போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ் ஆய்வாளர் சிவக்குமார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளார். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரகாஷின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து காயமடைந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். ராஜேஸ்வரியை குறிவைத்து பிரகாஷ் ஏன் தாக்குதல் நடத்தினார், எதற்காக இதுபோல பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார் என்பதெல்லாம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+