இதான் கடைசி.. கையில் மோதிரம்.. கணவனுக்கு சர்ப்ரைஸ் தர ஆசைப்பட்ட நர்ஸ்.. அடுத்த செகண்டே பலியான சோகம்!
ராட்சச அலையில் நர்ஸ் பலியானார்
திருவள்ளூர்: ஆசையாக கணவனுக்கு அணிவிக்க மோதிரத்தை எடுத்தார் மனைவி.. அப்படியே அலையில் அடித்து கொண்டு.. கணவன் கண் எதிரிலேயே சிக்கி மாயமாகி உயிரிழந்தார்.
வேலூர் காகித பட்டறையை சேர்ந்தவர் விக்னேஷ்.. 30 வயதாகிறது.. இவருடைய மனைவி வினிசைலா.. 27 வயது.. தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
நேற்று இவர்களுக்கு கல்யாண நாள்.. 7-ம் தேதி திருமண நாள் என்பதால் முன்னதாகவே அதனை கொண்டாட முடிவு செய்தனர் தம்பதி,.. விக்னேஷ், வினிசைலா, குழந்தை மற்றும் குடும்பத்தினர் 30 பேருடன் பாலவாக்கம் பீச்சுக்கு சென்றார்.

கேக்
அங்குதான் கேக் வெட்டி கொண்டாடினர் இந்த இளம்தம்பதி.. எல்லோருக்கும் கேக்கை ஊட்டிவிட்டனர்.. ஒன்றுசேர்ந்து செல்பி, வீடியோ எடுத்தனர்.. பிறகு தம்பதி இருவரும் மட்டும் தண்ணீர் பகுதிக்கு சென்று, அங்கு உட்கார்ந்து நீரில் கால் நனைத்துகொண்டே பேசி கொண்டிருந்தனர். ஒருத்தருக்கொருத்தர் சரியாக 12 மணிக்கு மோதிரம் மாற்றி கொள்வது என்பதுதான் பிளான்.

மோதிரம்
மணி 12-ஐ தொட்டது.. விக்னேஷூக்கு அணிவிக்க மோதிரம் எடுத்தார் வினிசைலா.. அப்போதுதான் அந்த எம ராட்சச அலை வந்தது.. உயரமான அலை வருவதை இருவருமே கவனிக்கவில்லை.. அந்த அலையின் வேகத்தில் தம்பதி இருவருமே அடித்து கொண்டு போனார்கள்.. இதை பார்த்ததும் கரையில் நின்றுகொண்டிருந்த உறவுகள் கத்தி கூச்சலிட்டனர்.

கரை ஒதுங்கியது
சத்தம்கேட்டு அங்கிருந்த மீனவர்கள் ஓடிவந்தனர்.. அவசர அவசரமாக கடலில் இறங்கினர்.. உடனடியாக விக்னேஷை மட்டும் உயிருடன் மீட்டனர். ஆனால் ரொம்ப நேரமாக தேடியும் வினிசைலாவை மீட்க முடியவில்லை. நீந்தி கரை சேர்ந்து வந்துவிடுவார் என்றும் காத்திருந்தனர்.. ராட்சத அலையில் அவர் இறந்தே போய்விட்டார்.. விடிகாலை கொட்டிவாக்கத்தில் வினிசைலா உடல் கரை ஒதுங்கியது.

துயரம்
தகவல் அறிந்துவந்த நீலாங்கரை போலீசார் வினிசைலா உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க மகிழ்ச்சியுடன் காத்து கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.. ஆசையாக கணவனுக்கு மோதிரம் போட வந்த இளம் பெண்.. அலையில் சிக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications