விஜயலட்சுமிக்கு உதவிய ஆத்திரம்.. வீரலட்சுமியை சுற்றி வளைத்து அடிக்க பாய்ந்த நாம் தமிழர் கட்சியினர்!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமியை திருவள்ளூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சுற்றி வளைத்து தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, திருமண மோசடி மற்றும் கட்டாய கருக்கலைப்பு புகார்களை தெரிவித்திருந்தார். 2011-ல் இதேபோல சீமான் மீது புகார் தெரிவித்து வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சீமான் மீது அதே புகாரை விஜயலட்சுமி தெரிவித்தது பரபரப்பை கிளப்பியது.

Tamil Outfit leader Veeralakshmi attackeby Naam Tamilar Cadres

வாய்ஸ் வீரலட்சுமி: சீமான் மீது புகார் தெரிக்க பெங்களூரில் இருந்து சென்னை வந்த விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி அடைக்கலமும் ஆதரவும் கொடுத்தார். சீமான் மீது விஜயலட்சுமியின் வாய்ஸாக வீரலட்சுமி சரமாரியாக புகார் கொடுத்தார்.

ஆவேசப்பட்ட சீமான்: இந்தப் பிரச்சனையில் விசாரணக்கு வர சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் இதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டார். அத்துடன் விஜயலட்சுமி, வீரலட்சுமி இருவரையும் ஆக்ரோஷமாக விமர்சித்தார் சீமான். என்னை ஸ்கெட்ச் போட்டு தூக்குவேன் என்கிற வீரலட்சுமியால் ஒரு ஸ்கெட்ச் பேனாவை தூக்க முடியுமா? 1 லட்சம் துப்பாக்கிகளைக் கடந்து பிரபாகரனை சந்தித்தவன் நான் தெரியுமா? வெட்டிப் போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன் என ஆவேசப்பட்டார் சீமான்.

திடீர் பல்டி: இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தாம் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுகிறேன்; நான் பெங்களூர் திரும்பி செல்கிறேன் என நடிகை விஜயலட்சுமி திடீரென அறிவித்தார். அப்போது வீரலட்சுமியின் கட்டுப்பாட்டில் தாம் சித்ரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது என்றும் அவர் கூறினார்.

1,000 பேருக்கு அன்னதானம்: இதனையடுத்து வீரலட்சுமி இன்று வெளியிட்ட அறிக்கையில், விஜயலட்சுமி- சீமான் பிரச்சனை சுமூகமாக முடிந்தது. நான் ஏற்கனவே வேண்டுதல் வைத்தபடி 1,000 பேருக்கு அன்னதானம் தரப் போகிறேன் என கூறியிருந்தார்.

சுத்து போட்ட நாம் தமிழர்: அத்துடன் இன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வீரலட்சுமி சென்றார். விஜயலட்சுமி விவகாரம் முடிந்ததால் அன்னதானம் கொடுக்க திருவள்ளூர் கோவிலுக்கு வீரலட்சுமி சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவரை திடீரென நாம் தமிழர் கட்சியினர் சிலர் சுற்றி வளைத்துத் தாக்க முயற்சித்தனர். அத்துடன் ஸ்கெட்ச் போட்டு அண்ணனை தூக்குவியா? இந்த ஸ்கெட்ச் போட்டு தூக்கி பாரு எனவும் கெரோ செய்தனர். இதனால் வீரலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு வீரலட்சுமி தகவல் தெரிவிக்க, அங்கு வந்த போலீசார் நாம் தமிழர் கட்சியினரை அங்கிருந்து வெளியேற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+