ஆவின் பால் ஊற்றும் கவரிலும் கூட ஊழல்! அமைச்சர் நாசர் பதவியில் நீடிப்பது அழகா? அண்ணாமலை கேள்வி
திருவள்ளூர்: திருவள்ளூரில் நடைபெற்ற பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திமுக அரசை காட்டமாக விமர்சித்தார்.
Recommended Video
பிரிட்டிசாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இந்தாண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டை மத்திய அரசு கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.
இந்த கொண்டாட்டங்களுக்காக நாடு முழுவதும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சுதந்திர தினம்
பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டில் உள்ள அனைவரும் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோல நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக சார்பில் சுதந்திர தினத்தைக் கொண்டாட கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அண்ணாமலை
இதனிடையே சுதந்திர விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் ஆவடியில் பேரணி நடைபெற்றது. ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி செக்போஸ்ட் காமராஜர் சிலை வரை நடந்தது இந்த பேரணியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஓராண்டு வரை இதனைக் கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

சுதந்திர தினம்
சுதந்திர தினவிழா எழுச்சியுடனும் மகழ்ச்சிாகவும் நாம் கொண்டாட வேண்டும். அதற்கு விழிப்புறவை ஏற்புத்தும் வகையிலேயே இந்த பேரணியை நடத்தி உள்ளோம். தமிழகம் முழுக்க இதுபோன்ற பேரணிகள் நடைபெறும். பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க, மாநிலம் முழுக்க 50 லட்சம் வீடுகளில் தேசியக் கொடியைக் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தேசியக் கொடியை அனைவரும் தங்கள் வீடுகளில் ஏற்ற வேண்டும். குறிப்பாக இந்தத் திட்டத்தை திமுக முன்னெடுக்க வேண்டும்.

ஊழல்
தமிழகத்தில் பல துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஆவின் நிறுவனத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. ஆவின் பாலில் ஊழல், பால் ஊற்றும் கவரிலும் கூட ஊழல் நடந்துள்ளது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. ஆவின் தொழிற்சங்கங்கள், பால் முகவர்கள் கூடச் சொல்கிறார்கள். அரை லிட்டர் ஆவின் பால் எடை குறைந்து இருக்கிறது. இது ஊரறிந்த உண்மை.

அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர் உடனடியாக தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும். அவர் மீது இப்படி ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள இவர் பதவியில் நீடிப்பது அழகா என்று அமைச்சர் நாசர் தான் பதில் சொல்ல வேண்டும்" என்று சில காட்டமான கேள்விகளை எழுப்பினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications