திருவள்ளூர் பஸ் ஸ்டாண்டில் பரபர.. இரவில் மாப்ளையை கொத்தோடு "அள்ளிய" மணப்பெண்.. எங்க வந்து யாராண்ட
திருவள்ளூர்: இளம்பெண்ணை ஏமாற்றிய என்ஜினியருக்கு போலீஸ் வலை விரித்துள்ளது.. இது தொடர்பாக மணப்பெண்ணின் போராட்டம் 16வது நாளாக தொடர்வதால், ராணிப்பேட்டையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. என்ன நடந்தது?
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டையை சேர்ந்தவர் 29 வயதான ஸ்ரீதர்.. என்ஜினியரான இவர், பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. தன்னுடன் பணிபுரியும் அனுசுயா என்பவரை காதலித்து வந்துள்ளார்.. இருவருமே கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

மிஸ்ஸிங்: எனவே, இரு குடும்பத்தினரும் காதலுக்கு பச்சைக்கொடி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். இதற்காக கடந்த 15ம் தேதி திருத்தணியில் ஒரு மண்டபத்தில், திருமணம் முடிவானது.. முகூர்த்த நாளன்று கல்யாண மண்டபமே பரபரப்பாக காணப்பட்டது. திருமண வரவேற்பும் சிறப்பாக முடிந்து, தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஸ்ரீதர் திடீரென மாயமாகிவிட்டார்.
மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் இந்த திருமணம் வேண்டாம் என்று ஸ்ரீதர் சொல்லிவிட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் அனுசுயா, சாதியை காரணம் காட்டி மணமகன் ஸ்ரீதர் மாயமானதாக திருத்தணி போலீசில் புகார் தந்தார். எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் இந்த புகாரை தந்தார்..

மாப்பிள்ளை ஸ்ரீதர்: இதையடுத்து திருத்தணி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, மாப்பிள்ளையை தேடி வந்தனர்.. கடந்த வாரம் பெங்களூருவிவில் ஸ்ரீதர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கவும் அங்கு சென்று, அவரை கண்டுபிடித்து திருத்தணிக்கு அழைத்து வந்தனர்.. இதையடுத்து, டிஎஸ்பி கந்தன் முன்னிலையில், ஸ்ரீதர், அனுசுயா இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.
ஸ்ரீதரும் அனுசுயாவை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார். ஆனால், அனுசுயாவை கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று கூறி, மறுநாளே ஸ்ரீதர் மறுபடியும் மாயமாகிவிட்டார்.. இதனால், அதிர்ச்சி அடைந்த அனுசுயா, மறுபடியும் டிஎஸ்பி அலுவலகம் வந்து, நீதி கேட்டு போராடினார். கிட்டத்தட்ட 17 நாட்களையும் கடந்து இந்த போராட்டத்தை அனுசுயா முன்னெடுத்தார்.
மணமகள்: இந்நிலையில், திருவள்ளூர் பகுதியிலேயே சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஸ்ரீதரனை நேற்றிரவு அனுசியா கண்டுபிடித்திருக்கிறார். உடனே, அவரை உறவினர்களின் உதவியுடன், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி ஆபீஸ் அலுவலகம் அருகே உள்ள அம்மன் கோயிலுக்கு அழைத்து வந்துள்ளார்.
பிறகு, அங்கு வைத்து 2 வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் மணமகன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தாலியையும் கட்டிக்கொண்டார். பிறகு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் ஆஜரானார்..
அதிரடி நடவடிக்கை: எனினும், அங்கிருந்து, மணமக்கள் இருவரையும் திருவள்ளூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மகளிர் ஸ்டேஷனில், அங்கு இருவீட்டார் முன்னிலையிலும் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. போலீசார் மணமக்களுக்கு தக்க அறிவுரையை சொல்லி அனுப்பி வைத்து, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை திருவள்ளூரில் ஏற்படுத்திவிட்டது.
கடந்த மாதம் திருமண வரவேற்பு முடிந்ததுமே எஸ்கேப் ஆன மணமகனுக்காக 17 நாள் போராட்டம் செய்து, அவரை தேடிக்கண்டுபிடித்து, உறவினர்கள் முன்னிலையில் கோயிலில் வைத்து திருமணமும் செய்துள்ள அனுசுயாவுக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications