தேவிகாவை தேடி வந்த பாம்பு.. கூரையில் கோழி முட்டையை எடுக்க போனால்.. திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர்: இந்தியாவில் பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் சூழலில், கடந்த 2025ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 431 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரபா மல்லிகார்ஜுன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் திருவள்ளுரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மத்திய அரசின் தரவுகளின்படி, கடந்த 2023ம் ஆண்டில் 183ஆக இருந்த பாம்புக் கடி மரணங்களின் எண்ணிக்கை, 2024-ஆம் ஆண்டில் 370-ஆக உயர்ந்தது. இது 2025ம் ஆண்டில் மேலும் அதிகரித்து 431-ஆக பதிவாகியுள்ளது.

மாநில வாரியான புள்ளிவிவரங்களை ஆராயும்போது, கர்நாடக மாநிலம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது தெரியவருகிறது. 2025-ல் அங்கு மட்டும் 157 பேர் உயிரிழந்துள்ளார்களாம்.. இது நாட்டின் மொத்த உயிரிழப்பில் சுமார் 36 சதவீதமாகும். கர்நாடகாவை தொடர்ந்து நம்முடைய தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகமாக உள்ளன.
அரசின் புதிய வழிகாட்டுதல்கள்
பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும், முறையான தரவுகளைச் சேகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, பாம்புக் கடியை Notifiable Disease அதாவது "அறிவிக்கப்பட வேண்டிய நோய்'" எனப் பட்டியலிடுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் இதனைச் செயல்படுத்தியுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு பாம்புக் கடி சம்பவமும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
தேசிய செயல்திட்டம் NAP-SE சொல்வதென்ன?
உலக சுகாதார அமைப்பின் இலக்கிற்கு இணங்க, 2030-ஆம் ஆண்டுக்குள் பாம்புக் கடி மரணங்களை 50 சதவீதம் குறைக்க "பாம்புக் கடி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயல்திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.
காடுகள் அழிப்பு, காலநிலை மாற்றம் மற்றும் மனித-பாம்பு மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தத் திட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 2021-ஆம் ஆண்டிலேயே மனித-வனவிலங்கு மோதல்களைக் கையாளும் வழிமுறைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் விரைவான மீட்புக் குழுக்கள் அமைத்தல் மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களை உருவாக்குதல் போன்றவை அடங்கும்.
சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தடையின்றி சிகிச்சை கிடைக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் "ஆன்டி-சினேக் வெனம்" மருந்துகளை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி வழிகாட்டுதல் வழங்க '15400' என்ற பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் நிலவும் காலதாமதமே மரணங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பதால், உடனடி மருத்துவ சிகிச்சையின் அவசியத்தை மக்களிடையே கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது.
பாம்புக் கடியை வெறும் விபத்தாகப் பார்க்காமல், ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சனையாகக் கருதி ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தேவிகா பாட்டி
மத்திய அரசின் இந்த தீவிரம் துவங்கியிருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்துவருகிறது. காரணம், இன்றுகூட ஒரு பாட்டி பாம்பு கடித்து பரிதாபமாக இறந்துள்ளார்..
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத் என்பவரின் தாயார் தேவிகா (70).. இவர் த்ன்னுடைய வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்..
இந்நிலையில், கோழி முட்டை எடுப்பதற்காகக் கூரையில் கையை வைத்தபோது அங்கிருந்த பாம்பு தேவிகாவை தீண்டி உள்ளது.. இதில் தேவிகா அங்கேயே சுருண்டு விழுந்தார்..
இந்த சம்பவத்தை தொடர்ந்து உறவினர்களால் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வீட்டில் வளர்ப்புப் பிராணிகளை பராமரிக்கும்போது நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications