'எனக்கு ஏன் சரக்கு வாங்கிட்டு வரல'.. புருஷனிடம் சண்டை போட்ட மனைவி.. நடந்த சம்பவம்
திருவள்ளூர்: புத்தாண்டு புடவை வாங்கித்தர, பிறந்த நாளுக்கு கிப்ட் வாங்கித்தரலன்னா, கணவர் கிட்ட சண்டை போடுற மனைவியை நாம கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்க ஒரு மனைவி சரக்கு வாங்கித்தரலைன்னு சண்டை போட்டிருக்கிறார். குவாட்டர் கேட்டு அடம் பிடித்த பெண்ணுக்கு அடுத்து என்ன நடந்துச்சுன்னு பார்க்கலாம் வாங்க..
திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூரில் தானியார் மாந்தோப்பு ஒன்று இருக்கிறது. எப்போதும் ஆள் இல்லாமல் அமைதியாக காணப்படும் அந்த மாந்தோப்பில், அரசு அதிகாரிகள், காவலர்கள், பொதுமக்கள் என கூட்டம் கூடியிருந்தது.

குறிப்பிட்ட அந்த ஒரு இடத்தை ஆட்கள் மும்முரமாக தோண்டினார்கள். சிறிது நேரத்தியே அவர்கள் எதிர்பார்த்தது போலேவே அங்கு ஒரு பெண் சடலம் இருந்தது. யார் இந்த பெண், இந்த பெண்ணை மாந்தோப்பில் கொன்று புதைத்து யார் என்ற கேள்வி எழுந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து போனது 23 வயதாகும் லட்சுமி என்பது தெரியவந்தது. இவரது கணவர் தர்மையா, 25 வயதாகும் இவர் குடும்பத்துடன் இந்த மாந்தோப்பை காவல் காக்கும் வேலையை செய்து வந்தார்.
தர்மையாக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும், திருமணம் ஆகி 3 வயதில் ஒரு மகன் உள்ளார். மாந்தோப்பை காவல் காக்கும் தர்மையா தனியாக ஊருக்கு சென்றிருக்கிறார், மனைவி எங்கே என்று அவரது சகோதரி கேட்டிருக்கிறார். அதற்கு சரியான பதில் தர்மையா கூறவில்லை. இதனால் குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் விடாமல் கேட்ட போது மதுபோதையில் நடந்ததை உளறி இருக்கிறார். மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்ததாக கூறியிருக்கிறார் தர்மையா. உடனே தகவல் அறிந்து போலீசார் மாந்தோப்பிற்கு சென்று லட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட தர்மையாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவந்திருக்கின்றன. மாந்தோப்பை காவல் காத்துக்கொண்டு, மனைவி, மகன் என்று சுமூகமாக வாழ்ந்த தர்மையாவின் வாழ்க்கையில் மது என்ற அரக்கன் நுழைந்த பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. காவல் வேலையை முடித்துவிட்டு கணவனும் மனைவியும் சேர்ந்து தினமும் மது அருந்துவது வழக்கமாம்.
ஒரு நாள் தர்மையா மனைவிக்கு மது வாங்கி வராமல் , தனக்கு மட்டும் மது வாங்கி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவனுடன் சண்டை போட்டாராம். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் லட்சுமி பூச்சி மருந்தை குடித்திருக்கிறார். ஏற்கனவே மூன்று முறை இப்படி குடித்திருக்கிறாராம். இதனிடையே சம்பவம் நடந்த அன்று பூச்சி மருந்து குடித்து லட்சுமி மயக்கம் போட்டு விழுந்துள்ளாராம். அடிக்கடி பூச்சி மருந்து குடிப்பதும், அவரை கஷ்டப்பட்டு காப்பாற்றுவதும் தர்மையாவிற்கு ஆத்திரத்தை வரவழைத்திருக்கிறது. அந்த ஆத்திரத்தில் கொலை வெறியுடன் மண் வெட்டியால மனைவியை அடித்துக் கொன்று மாந்தோப்பில் புதைத்திருக்கிறார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications