சென்னை உயர்நீதிமன்ற பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு... மர்ம நபர்கள் கைவரிசை... திருவள்ளூரில் ஷாக்!
திருவள்ளூர் : திருவள்ளூரில் உள்ள உணவகத்தில் உணவருந்திவிட்டு சாலை கடக்க முயன்ற சென்னை உயர்நீதிமன்ற பெண் ஊழியரின் 3 சவரன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் வழிபறி சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. தற்போது, உயர்நீதிமன்ற பெண் ஊழியரின் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி புரிந்து வரும் உமாதேவி என்பவர், தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் முடிந்ததும், திருவள்ளூர் வழியாக சென்னை வந்துள்ளார் . திருவள்ளூர் சி.வி.என் சாலையிலுள்ள தனியார் உணவகத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து, தனது காருக்கு செல்வதற்காக சாலையை கடக்க உமாதேவி முயன்றார். அப்போது, அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அப்போது உமாதேவி சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்டதால் செயின் இரண்டாக அறுந்ததில் சுமார் 3 சவரனை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் உமாதேவி நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் தனியார் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த உயர்நீதிமன்ற பெண் ஊழியரின் கழுத்தில் இருந்த நகை பறிக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால், காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications