திருவள்ளூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: 7.2 லட்சம் வாக்குகளுடன் வென்ற சசிகாந்த் செந்தில்!
திருவள்ளூர் : திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தேமுக வேட்பாளர் நல்லதம்பி, பாஜக சார்பாக பொன் வி.பாலகணபதி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் போட்டியில் இருக்கின்றனர்.

2008ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் போது திருவள்ளூர் லோக்சபா தொகுதி தனி தொகுதியாக உருவானது. அதன்பின் 2009ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் சுமார் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதன்பின் நடந்த 2014 லோக்சபா தேர்தலில் மீண்டும் அதிமுகவின் வேணுகோபால் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இதன்பின் 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பாக நின்ற ஜெயக்குமார் 7 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இம்முறை அதிமுக களம் காணாமல் கூட்டணி கட்சியான தேமுக களமிறக்கப்பட்டுள்ளது. அதிமுக நேரடியாக களம் காணாததால், காங்கிரஸ் கட்சிக்கு சாதகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் சசிகாந்த் செந்தில் முன்னிலை பெற்ற சூழலில், அதன்பின் மின்னணு வாக்கு இந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 9,386 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து தேமுக வேட்பாளர் நல்லதம்பி 3,777 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.
தற்போது 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 1,47,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து தேமுக வேட்பாளர் நல்லதம்பி 45,269 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் பொன் வி.பாலகணபதி 42,508 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும், நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் 19,410 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார்.
தற்போது 1.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 2,21,290 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து தேமுக வேட்பாளர் நல்லதம்பி 66,269 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் பொன் வி.பாலகணபதி 64,087 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும், நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் 29,326 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார்.
தற்போது 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 3,50,235 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் பொன் வி.பாலகணபதி 1,02,147 வாக்குகள் பெற்று 2வது இடத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து தேமுக வேட்பாளர் நல்லதம்பி 1,01,403 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் 49,573 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார்.
இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,26,713 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் பொன் வி.பாலகணபதி 2,06,021 வாக்குகள் பெற்று 2வது இடத்திற்கு வந்துள்ளார். தேமுக வேட்பாளர் நல்லதம்பி 2,04,410 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் 1,07,824 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார். மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் இணைந்து 47,573 வாக்குகள் பெற்றுள்ளனர்.
முந்தைய தேர்தல் முடிவுகள் :
திருவள்ளூர் தொகுதியில் 2 முறை அதிமுக வென்ற நிலையில், ஒரு முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. இந்த தொகுதியில் 2 முறை போட்டியிட்டுள்ள தேமுதிகவுக்கு கணிசமான வாக்குகள் இருந்தாலும், அதிமுகவுடன் கைகோர்த்து இம்முறை முதல்முறையாக களமிறங்கியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு, தேமுதிக சவால் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2009 லோக்சபா தேர்தல் முடிவுகள்
வேணுகோபால் (அதிமுக) - 3,68,294
காயத்திரி ( திமுக ) - 3,36,621
சுரேஷ் ( தேமுதிக ) - 1,10,452
2014 லோக்சபா தேர்தல் முடிவுகள்
வேணுகோபால் (அதிமுக) - 6,28,499
ரவிக்குமார் ( விசிக ) - 3,05,069
யுவராஜ் ( தேமுதிக ) - 2,04,734
ஜெயக்குமார் ( காங்கிரஸ் ) - 43,960
2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஜெயக்குமார் ( காங்கிரஸ் ) 7,76,292
வேணுகோபால் ( அதிமுக ) - 4,10,337
எம்.லோகரெங்கன் (மநீம) - 73,731
வெற்றிச்செல்வி ( நாம் தமிழர் ) - 65,416
பொன்.ராஜா ( அமமுக ) - 33,944
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications