திருவள்ளூரில் பீஸ் பீஸாக விழுந்த விசிக கவுன்சிலரின் கை.. கள்ளக்காதல் மனைவியால் திகைத்த திருநின்றவூர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் விசிக பிரமுகர் செய்த காரியம் , கட்சிக்குள் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. விசிக கவுன்சிலரான மனைவியின் புத்தி தடுமாறியதால், ஆவேசமடைந்து கணவர் எடுத்த முடிவு இன்று அக்குடும்பத்தையே நிலைகுலைய வைத்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.. என்ன நடந்தது? பெண் கவுன்சிலர் என்ன செய்தார்?
சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவரது மனைவி பெயர் கோமதி.. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்டீபன்ராஜும், கோமதியும், அரசியலில் தொடர்புடையவர்கள்.. மிக முக்கிய பொறுப்பையும் வகித்து வருபவர்கள்.

ஸ்டீபன்ராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருநின்றவூர் நகர செயலாளராக பொறுப்பில் உள்ளார்.. கோமதி, 26வது வார்டு கவுன்சிலராகவும், திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மனாகவும் பொறுப்பில் உள்ளார்.
4 ஆண் குழந்தைகள்
கல்யாணமாகி 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.. இந்த தம்பதிக்கு 4 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் திடீரென புயல் வீச துவங்கியது.. கடந்த சில மாதங்களாகவே கோமதியின் நடத்தையில் நிறைய மாற்றம் கணவருக்கு தென்பட்டுள்ளது.. அப்போதுதான், கவுன்சிலர் கோமதிக்கும் ஆண் நண்பர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வருவதை ஸ்டீபன்ராஜ் கண்டுபிடித்தார்.
இதுகுறித்து கோமதியிடம் ஸ்டீபன்ராஜ் கேட்டுள்ளார்.. புத்திமதி சொல்லியுள்ளார்.. தகாத உறவை கைவிடும்படியும் எச்சரித்துள்ளார்.. ஆனால், ஸ்டீபன்ராஜ் சொல்வதை, கோமதி கேட்கவில்லை.. இதனால் தம்பதி இடையே தகராறு வெடிக்க துவங்கியது..
சொல்ல சொல்ல கேட்காத கோமதி
சம்பவத்தன்றும், கவுன்சிலர் கோமதி தன்னுடைய ஆண் நண்பருடன் நடுகுத்தகை ஜெயராம் நகர் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருப்பதாக, ஸ்டீபன்ராஜுக்கு யாரோ தகவல் தந்துள்ளார்கள்.. இதைக்கேள்விப்பட்டு ஆவேசம் அடைந்த ஸ்டீபன்ராஜ், சம்பவ இடத்திற்கே நேடியாக அரிவாளுடன் சென்றுள்ளார்.
அங்கே ஆண் நண்பருடன் கோமதி பேசிக் கொண்டிருந்ததை கண்டதுமே ஆத்திரத்தில் அரிவாளுடன் அவர்களிடம் சென்றார் ஸ்டீபன்ராஜ்.. ஆனால், அதற்குள் அந்த ஆண் நண்பர் அங்கிருந்து எகிறி தப்பி ஓட்டம் பிடித்தார்..
இதனால் கோமதி மட்டும் வசமாக சிக்கியதால், அவரை அரிவாளாலேயே வெட்ட துவங்கினார்.. தலை, முகம், கை, கழுத்து என பல்வேறு இடங்களில் ஆவேசத்தில் வெட்டினார்.. இதில் கோமதியின் கை துண்டாக போய் விழுந்தது.. ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டார் கோமதி..
ஆண் நண்பரிடம் விசாரணை
பிறகு ஸ்டீபன்ராஜ், நேராக திருநின்றவூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்து, நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக கூறினார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இப்போது ஸ்டீபன்ராஜ் கைதாகி ஜெயிலில் உள்ளார்.. தப்பியோடிய கோமதியின் ஆண் நண்பரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..
திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறி விசிக பெண் கவுன்சிலர் கோமதியை, அவரது கணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன்-மனைவி இருவருமே அரசியலில் ஈடுபட்டு, கவுரவமான, நல்ல பதவிகளை வகித்து வந்த நிலையில், இன்று இருவரின் வாழ்வுமே சிதைந்துவிட்டது.. அந்த 4 குழந்தைகளின் கதி??
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
இதென்ன உத்தர பிரதேச மாடலா? கும்மிடிப்பூண்டி சிறுமி பலாத்காரம்.. ரகசியமாக உடல் அடக்கம்! கொடுமை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications