புத்தாண்டு ட்ரீட்..வீட்டில் கேட்ட அலறல் சத்தம்..இளம்பெண்ணை சூறையாடிய மூவர்.. திகிலடித்த திருவள்ளூர்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே புத்தாண்டு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர், அவரை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு நாளில் இந்த கொடுமையை அரங்கேற்றிய மூன்று கயவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் திருவள்ளூர் காக்களுர் சாலை பகுதியில் வசித்து வருகிறார். 26 வயதாகும் அந்த பெண் திருமணமானவர். வீட்டில் இருந்து அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே செல்லும் போது சீயஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய் உடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டது. விஜய் ரொம்ப நல்லவன் என்று நம்பினாள் அந்த பெண்.

புத்தாண்டு நாளில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டின. தனது வீட்டில் ட்ரீட் தருகிறேன் என்று அந்த பெண்ணை அழைத்தான் விஜய். சீயஞ்சேரியில் உள்ள காதலன் வீட்டிற்கு ஆசையோடு சென்றாள் அந்த இளம் பெண். விஜய் வீட்டில் அவனது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோரும் இருந்தனர். அப்போது மூவரும் மது அருந்தியிருந்தனர்.
இரவு நேரம் போதையில் இருந்த விஜய் உடன் தனிமையில் இருந்தார் அந்த பெண். அப்போது அங்கு வந்த விஜய்யின் நண்பர்கள், அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர். ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினர். அதற்கு அந்த பெண் சம்மதிக்காமல் போகவே மூவரும் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர். இளம்பெண் கத்தி கூச்சல் போட்டார். புத்தாண்டு நாளில் பக்கத்து வீட்டில் அலறல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் வந்து சத்தம் போடவே, மூவரும் தப்பி ஓடி விட்டனர்.
உடனடியாக இளம் பெண்ணை மீட்டதுடன் காவல் நிலையத்திற்கும் புகார் அளித்தனர். போலீசார் வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர் மல்க காவல்துறையினரிடம் கூறினார். அந்த பெண் அளித்த தகவலின் பேரில் தப்பி ஓடிய விஜய், சாம்ராஜ், சதீஷ் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது நடந்தவைகளை குற்றவாளிகள் ஒப்புக்கொள்ளவே மூவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது. புத்தாண்டு நாளில் உலகமே மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்க டிரீட் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரை நம்பி போன இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் திகிலை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications