தொங்கிட்டு இருந்த திருவள்ளூர் குமுதா.. பக்கத்திலேயே அந்த குழந்தை.. அஜித்குமாரை வேற திடீர்னு காணோம்
சென்னை: ஆசை ஆசையாக அஜித்குமாரை காதலித்தார் குமுதா.. பிறகு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.. மகிழ்ச்சியாக வாழ்க்கையை தம்பதியர் தொடர்ந்த நிலையில், குமுதாவுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி யோசித்தார்? என்ற குழப்பம் பெற்றோருக்கு வந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.. ஆனாலும் திருவள்ளூரில் இது தொடர்பான பரபரப்பு நீடித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்துள்ள காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதி தேவராஜ் - கற்பகம்.. இந்த தம்பதியின் செல்ல மகள் குமுதாவுக்கு 27 வயதாகிறது.. நன்றாக படித்து பட்டம் பெற்றவர் குமுதா.

அஜித்குமாருடன் காதல்
இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தபோது, தன்னுடன் வேலை பார்த்த அஜித்குமாரை காதலித்தார்.. பெங்களூருவை சேர்ந்த அஜித்குமார், குமுதாவை உயிருக்குயிராக நேசித்தார்..
பிறகு 2 வருடங்களுக்கு முன்பு அஜித்குமாரையே திருமணம் செய்து கொண்டார் குமுதா.. இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.. திருமணத்துக்கு பிறகு, காட்டுப்பாக்கம் விஜயலட்சுமி நகர் பகுதியில் அஜித்குமாருடன் தனிக்குடித்தனம் சென்று மகிழ்ச்சியாக வாழ்க்கையை துவங்கினார்.
அமுதா திடீர் முடிவு
இந்நிலையில், சம்பவத்தன்று வேலை விஷயமாக அஜித்குமார் பெங்களூரு சென்று விட்டார்... வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த அமுதா, திடீரென தன்னுடைய அம்மா, அப்பாவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார்.. அளவுக்கு அதிகமான மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லி போனை துண்டித்துள்ளார்..
இதைக்கேட்டு பதறிப் போன பெற்றோர், குமுதா வீட்டுக்கு ஓடிவந்துள்ளனர்.. ஆனால், அதற்குள் குமுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.. சடலமாக அவர் தூக்கில் தொங்கி கிடக்க, அவரது ஒன்றரை வயது குழந்தை அங்கே அழுதுகொண்டேயிருந்தது.. இதைக்கண்டு அலறிய பெற்றோர், உடனடியாக பூந்தமல்லி போலீசுக்கு தகவல் சொன்னார்கள்..
என்ன காரணம்
போலீசாரும் விரைந்து வந்து, குமுதாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தது.. இதனிடையே, தங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, குமுதாவின் பெற்றோர் புகார் தந்தனர்..
இந்த புகாரையடுத்து, சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குமுதா இறந்தது தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்... அதுமட்டுல்ல, குமுதாவுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இளைய தலைமுறையினர்
கள்ளக்காதல் அட்டகாசங்களால் வன்முறைகள் பெருகி வரும் நிலையில், சமீபகாலமாகவே இளைய தலைமுறையின் தற்கொலைகளும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சனைகளை சமாளிக்கும் பொறுமை, பக்குவம் இல்லாததும், சிரமங்களை எதிர்கொள்ள முடியாததும் போன்றவையே இதுபோன்ற இளம்வயது தற்கொலைகளுக்கு காரணங்களாகின்றன என மனநல மருத்துவர்களும் வேதனையுடன் சொல்கிறார்கள்.. அதிலும், படித்த, பட்டதாரியான, கைநிறைய சம்பாதிக்கும் பெண்களும் இப்படியான தற்கொலைகளை நாடுவது கவலையை தந்து வருகிறது.
சமீபத்தில் நடந்த புள்ளி விவரத்திலும் குடும்ப வன்முறையை எதிர்கொண்டதாகவும், கடின வேலைகள், புகுந்து வீட்டு செயல்பாடுகள் திருமண வாழ்வை கொடூரமானதாக மாற்றுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருந்ததையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதேசமயம், இளைய தலைமுறையின் அநியாய தற்கொலைகளையும் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமும் இன்று ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications