ஆசையாக பேசுவாங்க.. இவங்களை மட்டும் நம்பாதீங்க.. திருவள்ளூரில் திடீரென பரபரத்த உத்தரவு.. என்னாச்சு
திருவள்ளூர்: மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகவும், அல்லது படித்துமுடித்துவிட்டு, வெளிநாடுகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்காகவும் ஏராளமான இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்கள்: இப்படிப்பட்ட சூழலில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை மற்றும் படிக்க விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் போலியான நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்திருக்கிறார்கள். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் செய்திகுறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அதில், "வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே கல்வி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பக் கட்டணம் மற்றும் முதலீடுகள் செலுத்துவதை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
ஆசை வார்த்தை: ஆசை வார்த்தைகளை விளம்பரப்படுத்தும் போலி நிறுவனங்களை நம்பி கல்வி தொடர்பான ஆவணங்கள் மற்றும் தொகை செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இந்த நிறுவனங்களால் வெளிநாட்டில் வேலை, கல்லுாரிகளில் சேர வாய்ப்புகள் வாங்கித்தர அலைக்கழிக்கப்படும்போது இந்நிறுவனங்களுக்கு அளித்த ஆவணங்கள் மற்றும் முதலீடுகள் திரும்ப பெறுவது கடினமான பணியாகும்.
கவனம்: மேலும் இந்த பரிமாற்றத்திற்கு முறைப்படி சிவில் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டி உள்ளதால் காலதாமதம் ஏற்பட்டு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இளைஞர்களும் மாணவ, மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" என்று மாவட்ட எஸ்பி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications