Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மட்டன் கடையில் அசையாமல் நின்ற ஆபீசர்ஸ்.. திருவள்ளூர் அப்பு பிரியாணி கடையில்.. அண்டாவை உருட்டி.. பரபர

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபலமான அப்பு பிரியாணி கடைக்குள், அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர்.. அங்கிருந்த கிச்சனுக்குள் சென்ற ஆபிசர்ஸ், கடும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளானார்கள். என்ன நடந்தது?

சமீபகாலமாகவே, ஓட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தபடி உள்ளன. எனவ, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

tiruvallur

அதன்படி, பிரபல ஓட்டல்கள், நடைபாதை உணவகங்களில், இறைச்சி கூடங்களில், மீன் மார்க்கெட்டுகளில் என எங்கெங்கு புகார்கள் வருகிறதோ, அங்கெல்லாம் விரைந்து சென்று ஆய்வு செய்து, புகார்கள் உண்மையாகும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கெட்டுப்போன இறைச்சி: 10 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட சுமார் 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.

கடந்த வாரம், சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில், ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த 28 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதற்காக நல்ல முறையில் இருந்த 40 கிலோ ஆட்டு இறைச்சியையும் சேர்த்தே அதிகாரிகள் பறிமுதல் செய்து எச்சரித்திருந்தனர்.

திருவள்ளூர்: நேற்றுகூட திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.. அந்தவகையில், திருவேற்காடு அயனம்பாக்கத்தில் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல அப்பு பிரியாணி ஓட்டலுக்குள்ளும் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஓட்டலின் கிச்சனில் தரமற்று கிடந்த உணவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

இந்த திருவேற்காடு அயனம்பாக்கத்தில் அப்பு என்பவர் தன்னுடைய பெயரிலேயே பிரியாணி கடையை நடத்தி வருகிறார். இந்த கடை ஆரம்பித்ததிலிருந்து தினந்தோறும், ஏராளமான வீடியோக்களை சோஷியல் மீடியாவில் அப்பு பதிவு செய்து கொண்டே இருந்தார்..

பிரியாணி மோகம்: இவரது விளம்பரத்தை கண்டு மயங்கிய அசைவ பிரியர்கள், இந்த கடைக்கு படையெடுத்து வர ஆரம்பித்தனர்.. தொடர்ந்து அப்பு பிரியாணியின் ரெகுலர் கஸ்டமர்களாகவும் மாறிவிட்டனர். இதனால் அப்பு பிரியாணி மேலும் பிரபலமானது. நாளடைவில், பல்வேறு இடங்களில் அப்பு கடையின் கிளைகள் திறக்கப்பட்டன.

ஆரம்பத்தில் நல்ல முறையில் தயாராகி கொண்டிருந்த அப்பு பிரியாணி, நாளுக்கு நாள் தன்னுடைய தரத்தை இழந்தது.. தரமற்ற முறையில் பிரியாணி இருப்பதாக வாடிக்கையாளர்களே குற்றஞ்சாட்ட துவங்கினார்கள்.. இதனால் அப்பு கடை பிரியாணி மீது அதிருப்திகளும் எழுந்தன. இந்த சூழலில்தான், திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அப்பு பிரியாணி கடையின் சமையல் கூடத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அண்டா அண்டா: அப்போது சுகாதாரமின்றி பிரியாணி சமைத்ததாக கூறி, சமையல் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த உரிமையாளர் அப்பு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்... அத்துடன், பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டத்திலும் ஈடுபட்டார்.. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+