கேஸ் சிலிண்டருடன் ஓடிய ஜனம்! திருவள்ளூரில் சரக்கு ரயில் கவிழ்ந்து! இப்ப மீண்டும் தொடங்கிய ரயில் சேவை

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 வேகன்கள் எரிந்து கருகியதால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பயணிகளும் கடுமையான அவதிக்கு ஆளானார்கள்.. இந்நிலையில், பலமணி நேர நீண்ட போராட்டத்துக்கு பிறகு, திருவள்ளூர் ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது.

சென்னை மணலியிருள்ள 'ஐஓசிஎல்' நிறுவனத்திலிருந்து 52 டேங்கர்களில் சுமார் 12 லட்சம் லிட்டர் டீசல் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று வாலாஜா சாலை ரயில் நிலையம் நோக்கி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டது.

Tiruvallur thiruvallur gas cylinder

அப்போது திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் வந்தபோது ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதாவது, எதிர்பாராதவிதமாக 2 ரயில் இன்ஜின்கள், ஒரு வேகன் போன்றவை தனியாக பிரிந்ததாகவும்,

இதனாலேயே 49 வேகன்களில், 18 வேகன்கள் அடுத்தடுத்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதாகவும் தெரிகிறது. 70,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 வேகன்களில் பெட்ரோல், 45 வேகன்களில் டீசல் என்பதால், மளமளவென தீ பரவ துவங்கியது.. அடுத்தடுத்த 18 டேங்கர்களிலும் தீ பற்றிக்கொண்டு, கொழுந்து விட்டு எரிய துவங்கியது.. இதனால் அந்த பகுதி முழுவதுமே கருமையான புகை சூழ்ந்தது.

உயிர்ச்சேதம் தவிர்ப்பு

இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் ரயில் நிலைய மேலாளர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் பாதையில் செல்லும் உயர்நிலை மின் இணைப்பை உடனடியாக துண்டித்துவிட்டார்.. பிறகு திருவள்ளூர், திருவூர், தேர்வாய் கண்டிகை சிப்காட், ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

டீசல் டேங்கரில் உராய்வு ஏற்பட்டு விபத்து என்பதால், ரசாயனம் நுரை மற்றும் நீரால் தீயை அணைக்கும் பணி ஆரம்பமானது.. தீயை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், எண்ணெய் கீழே கொட்டியவாறே இருந்ததால், மீண்டும் எரிய துவங்கிவிட்டது.. இதனால், தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது. பிறகு இதற்காகவே, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 60 வீரர்கள் திருவள்ளூருக்கு வரவழைக்கப்பட்டனர்.

வெடித்து சிதறிய டேங்கர்கள்

அதில் ஒரு டேங்கர் வெடித்துச் சிதறியதுடன் ரயில்வே காம்பவுண்ட் சுவருக்கு வெளியே பாழடைந்த கிணற்றின் அருகே விழுந்து எரிந்தது... இதனால் ,அங்கிருந்த வீடுகளின் மீதிருந்த 4 வாட்டர் டேங்குகள், ஏசி இயந்திரம், 3 மா மரங்கள், 2 தென்னை மரங்களிலும் தீப்பற்றிக் கொண்டது. இதைப்பார்த்து பொதுமக்கள் பயந்துபோய், அங்கிருந்து வனப்பகுதியில் தஞ்சம் புகுந்தனர். கையோடு கேஸ் சிலிண்டர்களையும் எடுத்து சென்றுவிட்டனர்.

சுமார் 11 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு நேற்று மாலைதான் தீயை அணைக்க முடிந்தது.. ஆனால், அதற்குள் 18 வேகன்களும் எரிந்துவிட்டன.. இந்த தீ விபத்தில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் எரிந்து சேதமடைந்துள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

இதையடுத்து, தீயில் சிக்காத 32 வேகன்கள் மற்றும் ரயில் என்ஜின்களை அகற்றி, பாதுகாப்பாக வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.. இந்த விபத்து தொடர்பான போலீஸ் விசாரணை ஆரம்பமானது.. மேலும், விபத்து குறித்து விசாரித்து அறிக்கை சமர்க்க, விசாரணை குழுவை அமைத்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் உத்தரவிட்டார்..

சம்பவ இடத்தில் அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த திடீர் தீ விபத்தால், அந்த வழித்தடத்தில் உள்ள 4 தண்டவாளங்களும் சேதமடைந்தன. மின் கம்பிகளும் தீயில் எரிந்தன.

சென்னை - அரக்கோணம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.. சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.. குறிப்பாக, திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் எலக்ட்ரிக் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

கோவை விரைவு ரயில்கள்

சென்னை சென்ட்ரல் - மைசூருக்கு புறப்பட இருந்த வந்தே பாரத் விரைவு ரயில், சதாப்தி விரைவுரயில், சென்னை சென்ட்ரல் - கோவைக்கு புறப்பட இருந்த கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி விரைவு ரயில் உள்பட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன... அதாவது, 77 விரைவு ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்திருந்தது..

இதனிடையே, சேதமடைந்த இருப்பு பாதைகள் மற்றும் உயர்நிலை மின்சார கம்பிகளை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக ஆரம்பமானது.. ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. இதில், 3 மற்றும் 4வது ரயில் தண்டவாளம் சீரமைக்கப்பட்டதையடுத்து, ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது..

தெற்கு ரயில்வே நம்பிக்கை

சீரமைக்கப்பட்ட ரயில் பாதையில் ஆலப்புழா, பாலக்காடு உள்ளிட்ட விரைவு ரயில்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

1,2 தண்டவாளங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இந்த பணி இன்று மாலைக்குள் முடிந்துவிடும் என்றும், அதற்கு பிறகு ரெயில் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெற்கு ரயில்வே நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+