திருவள்ளூர் காய்கறி கடைக்குள் போன கள்ளக்காதலி.. பட்டப்பகலில் அக்கிரமம்.. கேமராவில் அப்பட்டமா பதிவு
திருவள்ளூர்: திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பட்டப்பகலில் நடந்த கொடுமை, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.. இதை பார்த்து பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். என்ன நடந்தது?
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில், 2வது திருமணம் செய்த விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு படுகாயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் விளக்கிலிருந்த தீ பரவியதில் அவர் எரிந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்துள்ள பகுதி புல்லரம்பாக்கம்.. இங்கு வசித்து வருபவர் 40 வயதான சுரேஷ்... இவரது மனைவி பெயர் பார்வதி.. 36 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன.. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக சுரேஷ் காய்கறிக்கடை வைத்துள்ளார்... திருவள்ளூர் மார்க்கெட்டிலேயே சுரேஷின் காய்கறி கடை உள்ளது.. அதனால் எந்நேரமும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.. காய்கறி கடையும் பிஸியாகவே இருக்குமாம்.
திருமணம்: இதே திருவள்ளூரில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி.. இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, புல்லரம்பாக்கத்திலுள்ள தன்னுடைய அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்.. அப்போதுதான், ராஜேஸ்வரிக்கும், சுரேஷுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது..
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று, இந்த கள்ளக்காதல் ஜோடி, புட்லூர் அம்மன் கோயிலுக்கு சென்று, கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. இதைக் கேள்விப்பட்ட சுரேஷின் மனைவி பார்வதி அதிர்ச்சி அடைந்தார். இதனால் இதுகுறித்து கேள்வி எழுப்புவதற்காக சுரேஷின் காய்கறிக்கடைக்கு பார்வதி சென்றிருக்கிறார்..
கண்டிப்பு - தகராறு: அப்போது காய்கறி கடையில் ராஜேஸ்வரி இருப்பதை பார்த்து மேலும் கொந்தளித்து போனார். இனிமேல் காய்கறி கடைக்கு வரக்கூடாது என்று ராஜேஸ்வரியை திட்டி அங்கிருந்து துரத்தி விட்டிருக்கிறார் பார்வதி..
ஆனால், பார்வதி அவ்வளவு திட்டியும் மறுபடியும் மார்க்கெட்டுக்கு வந்து, காய்கறி கடையை கவனித்து வந்துள்ளார் ராஜேஸ்வரி.. கடந்த 9ம் தேதி, இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, ஆவேசத்துடன் கிளம்பி மார்க்கெட் வந்தார் பார்வதி..
மார்க்கெட்: தன்னுடைய காய்கறிக் கடையில் ராஜேஸ்வரி உட்கார்ந்திருப்பதை பார்த்ததுமே, கையோடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றினார்... அடுத்த சில நொடியிலேயே தீ மளமளவென ராஜேஸ்வரி உடம்பெல்லாம் பற்றிவிட்டது.. இதில், வலி தாங்க முடியாமல் ராஜேஸ்வரி கதறி துடித்தார்.. இறுதியில் அதே தீயில் கருகி விழுந்தார்.
கிட்டத்தட்ட 80 சதவீதம் உடம்பில் தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார் ராஜேஸ்வரி.. தீவிரமான சிகிச்சை தந்தும்கூட, நேற்று முன்தினம் இறந்துவிடடார்.
இது தொடர்பாக சுரேஷ், பார்வதி, உறவினர்கள் விஜயா, மோகன், முரளி, நதியா, லட்சுமி, சங்கர் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
எரித்து கொலை: ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து பார்வதி எரித்து கொன்றுவிட்டதாக செய்திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்த துவங்கிவிட்டது..
இப்படிப்பட்ட சூழலில்தான், ராஜேஸ்வரி தீயில் எரிந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது.. அந்த வீடியோவில் சுரேஷின் மனைவி பார்வதியும், அவருடன் அவரது உறவினர்களும் காய்கறி கடைக்குள் வேகமாக வருவது பதிவாகி இருக்கிறது.. கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்து, காய்கறி கடையில் உட்கார்ந்திருந்த ராஜேஸ்வரி மீது ஊற்றுவதும் பதிவாகி உள்ளது.
ராஜேஸ்வரி : பார்வதி பெட்ரோலை ஊற்றியதுமே, ராஜேஸ்வரிக்கு பின்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கில் பெட்ரோல் தெறித்து குப்பென தீப்பற்றி விட்டது. அதாவது, சுரேஷின் அப்பா போட்டோ முன்பு, விளக்கு ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. சம்பவத்தன்றும், அப்படித்தான் விளக்கேற்றி வைத்திருக்கிறார்கள். அந்த விளக்குக்கு முன்புதான் ராஜேஸ்வரி உட்கார்ந்திருந்தார்.
ராஜேஸ்வரி மீது பார்வதி பெட்ரோல் ஊற்றியதுமே, விளக்கிலிருந்து தீப்பற்றி ராஜேஸ்வரி உடல் முழுவதும் எரிவது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருக்கிறது. அதாவது, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ராஜேஸ்வரியை பார்வதி தீ வைத்து எரிக்கவில்லை என்பதும், வெறும் பெட்ரோலை மட்டுமே பார்வதி மீது ஊற்றியிருக்கிறார் என்பதும் தற்போது நிரூபணமாகியிருக்கிறது. எனினும், கொலை வழக்காக இதனை மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications