திருவள்ளூர் சாலையில் உதயநிதிக்கு பிரம்மாண்ட கட்அவுட்.. ஆட்டோ மீது அப்படியே சரிந்து விழுந்த காட்சிகள்
திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேனர்கள் கட்டவுட்டுகள் வைக்கக் கூடாது என திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் நாளை நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதியை வரவேற்று வைக்கப்பட்ட பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர் சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக நிகழ்ச்சி ஒன்றுக்காக 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாலையின் நடுவே பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது அந்த பிளக்ஸ் பேனர் விழுந்தது. இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து நிலையில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளான ஜெயகோபால் அவரது உறவினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் மலம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பிளக்ஸ் பேனர்கள் வைக்க கட்டுப்பாடுகள் விதித்து நீதிமன்றமும் உத்தரவிட்டது. தொடர்ந்து திமுக நிகழ்ச்சிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என திமுக தலைமையும் உத்தரவிட்டிருந்தது.
அதனை மதிக்காமல் தொண்டர்கள் பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள் நடுவது என இருந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது அப்படி வைத்தால் திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் அமைப்பு செயலாளரான ஆர்எஸ் பாரதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் திமுகவினர் தொடர்ந்து பிளக்ஸ் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூரில் பலத்த காற்றால் தாக்குப் பிடிக்க முடியாமல் உதயநிதி ஸ்டாலினின் கட் அவுட் அப்படியே சரிந்து ஆட்டோ மீது விழுந்த காட்சிகள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் மத்திய அரசை கண்டித்து இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதை அடுத்து அவரை வரவேற்பதற்காக திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கூட்டத்தில் கலந்து கொள்ள உதயநிதி ஸ்டாலினும் வருவதாக கூறப்படும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட எல்லை முதல் கூட்டம் நடக்கும் திருப்பாச்சூர் வரை சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் இருபுறங்களும் திமுக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருப்பாச்சூர் வரை 25 அடி உயரத்தில் ராட்சத கட்டவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று திருவள்ளூரில் பலத்த காற்று வீசிய நிலையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications