பொன்னேரியில் அந்த 1 நிமிடம்.. பேசிட்டே கதறி கதறி கண்ணீர் விட்ட பலராமனுக்கு தண்ணீர்.. ஒன்னும் புரியல
திருவள்ளூர்: தமிழ்நாட்டில் வருகிற 23 ஏப்ரல் 2026 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் அரசியல் கட்சிகள் இப்போது செம்ம ஸ்பீடாக வாக்கு சேகரிப்பில் இறங்கிவிட்டன.. ஆட்சியைத் தக்க வைக்க திமுகவும், எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் மும்முரமாக வேலை செய்கின்றன.. இது தவிர நாதக, தவெக, ராமதாஸ் - சசிகலா கூட்டணி எனப் பலமுனை போட்டி நிலவுவதால் களம் சூடுபிடித்துள்ளது..
இன்று 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் ஒரு பக்கம் மனுத் தாக்கல் செய்வதிலும், இன்னொரு பக்கம் மக்களைக் கவர விதவிதமான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நேரத்தில் அதிமுக வேட்பாளர் ஒருவர் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

திருவள்ளூர் அதிமுக வேட்பாளர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனித் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.... இங்கு அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ பி.பலராமன் போட்டியிடுகிறார்.. இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருக்கிறார்.. பொன்னேரி தொகுதியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வரும் பலராமன், நேற்று நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்..
அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பலராமன், "மக்கள் மனதில் என்றைக்கும் குடி கொண்டிருக்கிற எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை நாம் மலர வைக்க வேண்டும்" என்று உருக்கமாகப் பேசினார்..
பேசிட்டே கதறி கதறி அழ ஆரம்பித்த பலராமன்
பிறகு, "உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் போட்டு இந்த எளிய தொண்டனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று சொல்லும்போதே அவர் திடீர்னு தேம்பி அழத் தொடங்கிவிட்டார்..
அவரது கண்ணீரைப் பார்த்த நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.. பின்னர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசிய அவர், "நீங்கள் எல்லோரும் எனக்காகத் துணையாக இருக்கிறீர்கள்.. அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டு இருப்பேன்.. உங்களுக்கு எந்த நேரத்தில் எந்த காரியம் என்றாலும் அதை நான் கண்டிப்பாகச் செய்து தருவேன்" என்று உறுதி அளிக்கும்போது மீண்டும் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார்..
வேட்பாளர் பலராமன் அழுது கொண்டே பேசியதால் கூட்டத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவருக்குத் தண்ணி கொடுத்து ஆறுதல் சொன்னார்கள்..
ஒரு மாவட்டச் செயலாளராகவும், முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்த ஒருவர் இப்படி மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதது பொன்னேரி தேர்தல் களத்தில் பெரிய டாக் ஆக மாறியுள்ளது.. "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என அவர் கண்ணீருடன் கேட்டது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது..
அதிர விட்ட வேல்முருகன்
நேற்றைய தினம், விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் தலைவர் வேல்முருகன் தொண்டாமுத்தூர் மற்றும் கோவை தெற்கில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை, வாபஸ் பெறச் செய்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
வேட்பாளரின் இந்த விநோத கோரிக்கை இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும்போதே, பொன்னேரி பலராமனின் பேச்சு அதற்குமேல் வைரலாகி கொண்டிருக்கிறது...!!
-
வெறும் ரூ.51,237 மட்டும் தான்.. இடும்பாவனம் கார்த்திக் - வீரப்பன் மகளின் சொத்து மதிப்பு இதுதான்! முழு விவரம் -
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
"மும்மொழி கொள்கை வைத்து பிரச்சாரம் செய்யும் தைரியம் இருக்கா.?" பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால் -
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விஜய்.. கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து கிரேட் எஸ்கேப்! -
மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு! -
"நாடார் - தேவர்" ஜாதிக்கு அதிக வாய்ப்பு.. தொகுதி வாரியாக நெல்லை - தென்காசி வேட்பாளர்களின் பின்னணி -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி! -
தவெக தலைவர் வயது 51ஆ, 52ஆ? திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த விஜய்.. பலே












Click it and Unblock the Notifications