திருவள்ளூரில் மீண்டும் கொடூரம்.. வடமாநில இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்! என்ன நடந்தது?
திருவள்ளூர்: திருவள்ளூரில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த இளைஞர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஒடிசாவை சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர், சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருத்தணி ரயில் நிலையம் அருகே சுராஜ் என்பவரை 4 சிறுவர்கள் கத்தியால் வெட்டி ரீல்ஸ் எடுத்தனர்.

திருவள்ளூரில் மீண்டும் தாக்குதல்
இதேபோல் திருத்தணி ரயில் நிலையத்தில் வியாபாரி ஒருவர் வாலிபர்களால் தாக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமாசங்கர். இவர் திருவள்ளூர் அடுத்த மப்பேடு உசேன் நகர் பகுதியில் நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதங்களாக தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வரும் ரமாசங்கர், நேற்று காலை கொடூரமாக தாக்கப்பட்டார்.
முகம் முழுவதும் ரத்த காயம்
இதில் முகம் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வடமாநில இளைஞர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபோதையில் தூங்கியதாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தாக்கபட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. ஆனால், தாக்குதலில் காயம் அடைந்த இளைஞர் கூறுகையில், "தனது சம்பளம் ரூ. 10 ஆயிரத்தை சிலர் தாக்கி பறித்ததாகவும் கூறியுள்ளார்.
இருவரை பிடித்து போலீசார் விசாரணை
இதையடுத்து, வட மநில இளைஞர் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் என இருதரப்பினருடமும் புகாரை பெற்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வட மாநில இளைஞரை தாக்கியதாக லோகேஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரை மப்பேடு போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications