திருவள்ளூரில் இந்த மேடம் யார்? மீண்டும் புயல்? ஹென்றியே கிளம்பி வந்துட்டாரு! தமிழக அரசுக்கு கோரிக்கை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அரசு பள்ளி குறித்த புகார் ஒன்று தமிழக அரசுக்கு சென்றுள்ளது.. அத்துடன் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே, அரசு பள்ளிகள் குறித்த செய்திகளில் அதிகமாக அடிபட்டு வரும் பெயர் ஜீவா.. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஜீவா.

தலைமை ஆசிரியை: தன்னுடைய பள்ளியின் ஆசிரியர்களையும், மாணவிகளையும் தரக்குறைவாக பேசுவதாக இவர் மீது தொடர் புகார்கள் எழுந்தவாறே இருந்தன.. இதையடுத்து, தலைமை ஆசிரியை ஜீவா ஊத்துக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். எனினும், ஜீவா அந்த பள்ளிப்பட்டு பள்ளியிலேயே பணியாற்றி வரவும், ஆத்திரமடைந்த 5 ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டே சென்றுவிட்டார்களாம்.
இதனால், பெரும் சிரமத்திற்கு ஆளான மாணவிகளும், ஆத்திரமடைந்தது, வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்திலும் இறங்கிய வரலாறு உண்டு. தலைமை ஆசிரியை ஜீவாவை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால், இல்லையேல் தங்களில் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் மாணவிகள் அன்று எழுப்பியிருந்த கோஷம் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பியிருந்தது.

குற்றச்சாட்டுகள்: தற்சமயம் பென்னளூர்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜீவா பணியாற்றி வருகிறார். இப்போது மீண்டும் அதே குற்றச்சாட்டுகள் ஜீவா மீது முன்வைக்கப்பட்டு வருகிறது. இவரது டார்ச்சர் தாங்காமல் இந்த பள்ளியிலும் 12 டீச்சர்கள் டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு சென்றுவிட்டதாகவும் சலசலக்கப்படுடிகிறது.
இப்படிப்பட்ட சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு, அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப்பேரவையின் நிறுவனரும், தேசிய தலைவருமான டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியிருக்கிறார்.. அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எழுதியிருக்கும் அந்த கடிதம் இதுதான்:

பள்ளிக்கல்வி துறை: "தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கு அல்லும் பகலும் அயராது பாடுபடும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் சீரிய தலைமையின் கீழ், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சராக தாங்கள் பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்வித்துறையின் தரமும் தேர்ச்சியும் வளர்ச்சியும் கணிசமாக உயர்ந்துள்ளதை யாரும் மறுக்கவும், மறைக்கவும், மறக்கவும் முடியாது.
இத்தருணத்தில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம், ஊத்துக்கோட்டை வட்டம், பென்னளூர்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் திருமதி. ஜீவா அவர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகள் கல்வித்துறையில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளது.
பள்ளி கல்வி தரம்: மேலும் அவரின் அலட்சியப் போக்கும், சக ஆசிரியர்களை அனாவசியமாக பேசியும், அவமானப்படுத்தியும், அடிமைத்தனமாக நடத்தியும், சாதீய வன்கொடுமைக்கு ஆளாக்கியும் வருவதன் காரணமாகவும் மற்றும் அந்த பள்ளியின் வளர்ச்சிக்கான எந்தவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லாததன் காரணமாகவும், அந்தப் பள்ளியின் கல்வி தரம் மிகவும் குறைந்தும், பள்ளியின் நிர்வாகம் சீர்குலைந்தும் போய் உள்ளது.
இதன் விளைவாக இந்த ஆண்டு நடைபெற்ற அரசு தேர்வில் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் தோல்வியடைந்துள்ளனர்.
குறிப்பாக, பத்தாம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் 46 பேர் தேர்வு எழுதினர் இதில் 39 பேர் அதாவது 80 சதவிகித மாணவர்களும், பதினோராம் வகுப்பில் பயின்ற 52 மாணவர்களில் 50 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 25 பேர் அதாவது 50 சதவிகித மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் 65 மாணவர்கள் தேர்வு எழுதினர் இதில் 50 மாணவர்கள் அதாவது 77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விசாரணை: இது சம்பந்தமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. ஜீவா அவர்களை தான் மாணவர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சுமத்துகின்றனர். இவர் மீது ஏற்கனவே முதலமைச்சர் தனி பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிகிறது.
இந்தப் பள்ளியில் கழிவறை, குடிநீர், பாதுகாப்பு சுற்று சுவர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் ஏதும் சரியான பராமரிப்பு இல்லாமலும் மிகவும் மோசமான மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் ஆசிரியர்களும் மாணவர்களும் மற்றும் பள்ளியின் பணியாளர்களும் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சக ஆசிரியர்கள்: மேலும், சக ஆசிரியர்களை பணி செய்ய விடாமலும், பள்ளியின் மோசமான கட்டமைப்பை குறித்து புகார் தெரிவித்தால், அவர்களை சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கி தலைமை ஆசிரியர் மிரட்டி விரட்டுவதும் தொடர் கதையாக இருந்து வருவதாக விசாரணையில் தெரிய வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் பள்ளியின் நிலைமை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் சூழ்நிலை மிகுந்த கவலை தரும் விஷயமாக உள்ளது.
ஆகவே, பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் கருதி மேற்கண்ட பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி சம்பந்தமான கோரிக்கையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, கனிவுடன் பரிசீலித்து, தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக இட மாற்றம் செய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள்: மேலும் சரியான தலைமை ஆசிரியரையும், போதிய பிற ஆசிரியர்களையும் நியமனம் செய்தும் மற்றும் பள்ளியின் அடிப்படை கட்டமைப்புகளை புணரமைப்பு செய்தும் உதவிட வேண்டும்" என்று ஹென்றி கடிதம் எழுதியிருக்கிறார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications