திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூண்டி பஸ் ஸ்டாண்டில்.. திமுக எம்.எல்.ஏ செய்த காரியத்தை பார்த்தீங்களா.. அப்படியே விக்கித்த மாணவர்கள்

பூண்டியில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தார் திருவள்ளூர் எம்எல்ஏ

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூர் பஸ் ஸ்டாண்டில் திமுக எம்எல்ஏ செய்த காரியத்தை பார்த்ததும், பள்ளி மாணவர்கள் மலங்க மலங்க விழித்துள்ளனர்.
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டம் கடந்த 1997ம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது...

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரம் அமைக்கப்பட்டு அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம், தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அனைத்துதுறை அலுவலகங்களும் ஒவ்வொன்றாக அமைக்கப்பட்டன.

இந்தியா முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள்! திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் முக்கிய அட்வைஸ்!இந்தியா முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள்! திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் முக்கிய அட்வைஸ்!

 பஸ் வசதி

பஸ் வசதி

இதனால், மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கும், தங்களின் பல்வேறு தேவைகளுக்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி அலுவலகம், சிறுபான்மை துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, வேளாண்மை துறை, வருவாய்த்துறை என பல்வேறு துறைகளுக்கு வந்து செல்ல பேருந்து வசதி மேலும் தேவைப்படுகிறது... இங்கே பணிபுரியும் அரசு ஊழியர்கள், தனியார் ஒப்பந்த ஊழியர்கள் என ஏராளமானோர் தினசரி பேருந்தில் வந்து செல்வதாலும், இந்த வசதியை அதிகப்படுத்த கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

 பேருந்து வசதி

பேருந்து வசதி

பூண்டி நீர்த்தேக்க பகுதியை காண ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், இந்த பகுதிக்கும் பேருந்து வசதி தேவையானதாக இருக்கிறது.. இந்நிலையில், இதே பூண்டியில் ஒரு சம்பவம் இன்று நடந்துள்ளது.. சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ, விஜி ராஜேந்திரன் வந்திருந்தார்.. நிகழ்ச்சியில் அனைத்து பயனாளிகளுக்கும் தங்கம் வழங்கினார்.

எம்எல்ஏ

எம்எல்ஏ

அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு, அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் செல்ல வேண்டி இருந்தது.. சற்று தொலைவிலேயே அந்த சுகாதார நிலையம் இருந்ததால், அங்கிருந்து புறப்பட்டு நடந்தே சென்றார்.. அப்போது பஸ் ஸ்டாண்டில் மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.. அவர்களை பார்த்தும் மாணவர்கள் எம்எல்ஏ ராஜேந்திரனிடம் சென்று, பஸ் வசதி சரியாக இங்கு இல்லை..

 வேண்டுகோள்

வேண்டுகோள்

அதனால், காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ- மாணவிகள் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.. போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறோம் என்று சொன்னார்கள்.. அந்த நேரம் பார்த்து பூண்டியில் இருந்து புறப்பட வேண்டிய பஸ் அங்கு வந்து நின்றது... இதனால் மாணவர்கள் முண்டியடித்து கொண்டு அந்த பஸ்ஸில் ஏறினார்கள்...

 படிக்கட்டில் பயணம்

படிக்கட்டில் பயணம்

இதை பார்த்ததும் எம்எல்ஏ ராஜேந்திரனும் ஓடிவந்து, மாணவர்களை முண்டியத்து கொண்டு அந்த பஸ்ஸில் ஏறினார்.. படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்தார்.. எம்எல்ஏ ஓடிப்போய் படிக்கட்டில் ஏறுவதை பார்த்ததும் மற்ற திமுக நிர்வாகிகள் ஓடிசென்று படிக்கட்டில் ஏறி கொண்டனர்.. ஆரம்ப சுகாதார நிலையம் வரை அவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்து வந்தனர்.. இதை பார்த்து அந்த பள்ளி மாணவர்கள் விக்கித்து போய் நின்றனர்...!

English summary
why Poondi dmk mla rajendran traveled in bus step near Thiruvallur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X