தம்பி பொண்டாட்டிக்கு "ஸ்வீட்" வாங்கி தந்த அண்ணன்... அவ்வளவுதான்.. ஒரே "வெட்டு"!
அண்ணனை கொன்ற தம்பி கைதானார்
திருவள்ளூர்: தம்பி பொண்டாட்டிக்கு ஸ்வீட் வாங்கி தந்துள்ளார் அண்ணன்... அவ்வளவுதான்.. அரிவாளாலேயே வெட்டுப்பட்டு இறந்துவிட்டார்..!
திருவள்ளூரை அடுத்துள்ளது குமாரச்சேரி என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் யோவான்.. இவருக்கு 25 வயசாகிறது.. இவரது தம்பி ஏசான்.. அவருக்கு 22 வயசாகிறது.. 2 பேருமே கூலி தொழிலாளர்கள்.
இதில் ஏசானுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உள்ளதாம்.. அடிக்கடி கஞ்சாவும் அடிப்பாராம்.. சற்று மனநிலை சரியில்லாமல் உள்ளதாக சொல்கிறார்கள். இவருக்கு கல்யாணமாகிவிட்டது. மனைவி பெயர் அனுஷா.

ரத்த வெள்ளம்
இந்நிலையில், சம்பவத்தன்று அண்ணன் - தம்பி 2 பேருமே வீட்டில் இருந்தனர்... அப்போது திடீரென ஏசான், ஒரு கத்தியை எடுத்து வந்து யோவானின் தலை, கழுத்து பகுதியில் சரசரவென வெட்டி தள்ளினார்.. இதனால் நிலைகுலைந்து போன யோவான், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக அங்கேயே இறந்து போய்விட்டார்.

விசாரணை
இதையடுத்து, தகவலறிந்த மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசானை கைது செய்தனர்.. விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போது அவர் போலீசில் தந்த வாக்குமூலத்தில் சொன்னதாவது, "நான் நெல்லூரில் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தேன்.. அப்போதான் அனுஷாவை சந்தித்தேன்.. காதலித்தோம்... 2 வருஷத்துக்கு முன்பு, என்னுடைய 20 வயசில் கல்யாணம் செய்துக்கிட்டேன்.

பெயிண்ட்டிங்
என் அண்ணன் யோவான் பெயிண்டிங் வேலை செய்கிறார்.. நெல்லூரில் இப்போ குடியிருக்கேன். கடந்த மார்ச் மாசம்தான் குமாரச்சேரிக்கு வந்து தங்கினோம். ஒரு மாசத்துக்கு முன்னாடி அனுஷாவுக்கு பிறந்த நாள் வந்தது.. அப்போ யோவான், ஊருக்கு போய் அனுஷாவுக்கு பிறந்தநாள் கேக் வாங்கி தந்து கொண்டாடி இருக்கிறார்..

நெருக்கம்
என் பொண்டாட்டிக்கு யோவான் எதுக்கு கேக் வாங்கி தரணும்? இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் வந்தது.. இதில் மன உளைச்சலும்அதிகமாகிடுச்சு.. ஒருவேளை அனுஷாவுடன் என் அண்ணன் நெருக்கமாக இருப்பதாக நினைத்து வெட்டிக்கொலை செய்தேன்" என்றார். இப்போது ஏசானிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications