ஜவ்வாதுமலை மேல்பட்டு அருகே 1000 ஆண்டுகள் பழமையான புலிகுத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு!
திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை மேல்பட்டு அருகே 1000 வருடம் பழமையான புலிகுத்திப்பட்டான் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் , உதயராஜா மற்றும் நீலகண்டன் இனைந்து ஜவ்வாது மலைப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது ஆவணம் செய்யப்படாத ஆயிரம் வருடம் பழமையான நடுகல் ஒன்றைக் கண்டறிந்தனர்.
செங்கத்தில் இருந்து பரமனந்தல் வழியாக ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் மேல்பட்டு ஊரை சேர்ந்த முனைவர் திரு கமல கண்ணன் தந்த தகவலின் பேரில் தென்மலையில் உள்ள காப்புக்காட்டுக்குள் இருக்கும் நடுகல்லைத் தேடிப் பயணித்தோம்.

காப்புக் காடு
பரமனந்தல் - மேல்பட்டு இடையே உள்ள தென்மலை பலாமரத்தூர் காப்புக்காட்டுக்குள் வலதுபுறமாகப் பிரியும் ஒற்றையடிப் பாதையில் வனத்துக்குள் சுமார் இரண்டு கி.மி பயணித்த பொழுது ஒரு மரத்தின் கீழ் நடுகல் ஒன்று இருப்பதைக் கண்டோம் . மேலும் அதனை ஆய்வு செய்த பொழுது , அந்நடுகல் புலியுடன் போரிட்டு மரணம் அடைந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என்பது கண்டறியப்பட்டது.

நான்கு அடி உயரம்
சுமார் மூன்றடி அகலமும் நான்கு அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் இடது புரம் வீரன் ஒருவன் தனது இடது கையில் வில்லையும் , அம்பையும் தாங்கிக்கொண்டு வலது கையில் குறுவாளை உருவி உயர்த்தியவாறு பிடித்து ஆக்ரோஷமாகச் சண்டையிடும் காட்சி புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் அணிகலன்
இவ்வீரனின் தலையில் கொண்டை பின்புறமாகவும் கழுத்தில் அணிகலனாக சவடி , இருகைகளில் தோள்வளையும் அணிந்து இடையில் உடுத்தப்பட்டுள்ள ஆடை தொடை வரை நீண்டு , தனது இடது காலை முன்வைத்துப் போரிடச் செல்வது போல காட்டப்பட்டுள்ளது.

வலது புறம் புலி
வீரனின் வலது புறம் புலி ஒன்று ஆக்ரோஷமாக காட்டப்பட்டுள்ளது . எனினும் அதன் மீது அம்பு தைத்தது போல் காட்டப்பட விடவில்லை . எனவே இப்புலியை எதிர்த்துப் போரிட்ட பொழுது இவ்வீரன் மரணம் அடைந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. ஊரில் உள்ள ஆநிரைகளையோ (ஆடு , மாடு) , மக்களையோ தாக்கும் புலியை எதிர்த்துச் சண்டையிட்டு உயிரை விடும் வீரரை நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் பல்லவர் காலம் தொட்டே வழக்கில் உள்ளது. இவ்வகையான நடுகற்களை புலிகுத்திபட்டான் கல் என்று அழைப்பர்.

காக்கும் பொருட்டு
அதுபோல இவ்விடத்தில் புலியிடம் இருந்து ஊர்மக்களையோ , ஆநிரைகளையோ காக்கும் பொருட்டு சண்டையிட்ட பொழுது உயிர் நீத்த இந்த வீரனுக்கு இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் நடுகல் எடுத்து வழிபாடு செய்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. இந்நடுகல்லில் காட்டப்பட்டுள்ள வீரனின் தோற்றம் மற்றும் சிற்பமைதியை வைத்து இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய நடுகல்லாகக் கருதலாம்.

மோர்புட்டான் கல்
ஊர் மக்கள் இந்நடுகல்லை "மோர்புட்டான்" கல் என்ற பெயரில் வழிபாடு செய்கின்றனர் . நேர்த்திக்கடன் உள்ளவர்கள் வைகாசி மாதம் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றார் . மலையில் வாழும் மக்களில் "மோர்பட்டான்" என்ற ஒரு தனி குலம் இருப்பதாகவும் , அக்குலம் முற்காலத்தில் காவல் காக்கும் பொறுப்புகளில் ஈடுபட்டதாகவும் முனைவர் திரு கமல கண்ணன் தெரிவித்தார். இதன்மூலம் இந்த நடுகல் வீரனும் ஊரைக் காக்கும் பொருட்டு உயிர் விட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஜவ்வாது மலைத் தொடரில் புலிகள் இருந்தமைக்கான சான்றாக கோவிலூர் நடுகல்லைத் தாண்டி நமக்குக் கிடைத்துள்ள மேலும் ஒரு சான்று இந்த நடுகல்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications