ராத்திரி நேரம்.. வயற்காட்டில்.. விதவை பெண் என்றும் பாராமல்.. திருவண்ணாமலை அருகே குரூரம்!
விதவையை பலாத்காரம் செய்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்
திருவண்ணாமலை: விதவை பெண் என்றும் பாராமல்.. நைட் நேரத்தில்.. வயக்காட்டில் லட்சுமியை பலாத்காரமும் செய்து கொலையும் செய்துள்ளார் ஒரு குரூரர்!
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்துள்ளது வேலந்தாங்கல் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் லட்சுமி.. 49 வயதாகிறது.. கணவனை இழந்தவர்.. தன் மகனுடன் வசித்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி, ரகுநாதசமுத்திரம் அருகே உள்ள தனது வயலில் காட்டுப்பன்றிகள் தொல்லையை தடுக்க இரவு காவல் பணிக்கு சென்றுள்ளார்.. ஆனால் பொழுதுவிடிந்தும் லட்சுமி வீட்டுக்கு வரவே இல்லை.. அதனால், உறவினர்கள் பதறி போய் அக்கம் பக்கம் தேட துவங்கினர்.
அப்போதுதான், அங்குள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்தார் லட்சுமி.. இதை பார்த்து அலறிய அவர்கள், உடனடியாக பெரணமல்லூர் போலீசில் புகார் தரவும், அவர்கள் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். சடலத்தையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்..
பிறகுதான், லட்சுமியை பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக கடந்த 11ம் தேதி ...
வேலந்தாங்கல் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் மீது சந்தேகம் வலுக்கவும், அவரைபிடித்து விசாரித்தனர்.. அவருக்கு 36 வயதாகிறது.. ஆனால் போதிய ஆதாரம்எதுவுமே கிடைக்காமல் அவரை அனுப்பி வைத்துவிட்டனர்.
இந்நிலையில் 2 நாளைக்கு முன்பு நடராஜன் ரெட்டிகுப்பம் விஏஓவிடம் நேரில் வந்து, தான்தான் லட்சுமியை கொன்றதாக வாக்குமூலம் தந்து, சரணடைந்தார்.. அப்போது அவர் சொல்லும்போது, "சம்பவத்தன்று குடிபோதையில் இருந்தேன்.. நைட் நேரம் இருட்டாக இருந்தது.. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெளிச்சமாக இருந்தது.. அங்கு சென்று பார்த்தால்,லட்சுமி மட்டும் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அதனால்தான் உல்லாசத்துக்கு வருமாறு அழைத்தேன்.. அவர் மறுக்கவும், நான் வலுக்கட்டாயமாக அவரை பலாத்காரம் செய்தேன்.. பிறகு கழுத்தையும் நெரித்து கொன்றுவிட்டு, அங்கிருந்த கிணற்றில் பிணத்தை தூக்கி வீசிவிட்டு வந்தேன்" என்றார்.. இதையடுத்து கொலை நடந்த 10 மாதங்களுக்கு பிறகு தானாக வந்து சரணடைந்த நடராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications