திருவண்ணாமலையில் வெளியூர் வாகனங்களுக்கான பார்க்கிங் பிரச்சனை.. முக்கிய கோரிக்கை வைத்த விக்கிரமராஜா
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வெளியூர் வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் எஸ்.ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வந்திருந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: "திருவண்ணாமலை மாவட்டம் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற மாவட்டம். குறிப்பாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உலககெங்கிலும் உள்ள மக்கள் வருகின்றனர். இந்த மாவட்டத்தில் பல்வேறு சாலை சீரமைப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு துரிதமாக எடுத்து வருகிறார். அதற்கு தமிழ்நாடு வணிகர்களின் பேரமைப்பு சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், திருவண்ணாமலைக்கு வருகின்ற மக்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இட வசதிகள் இல்லாததால் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் வணிகர்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அறநிலையத்துறை அமைச்சர் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் நிறுத்துவதற்கு என சரியான இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும்.
வாகனங்கள் எல்லாம் நகரத்திற்குள் வர முடியாத நிலையில் உள்ளது. இதனால் நகரத்தில் உள்ள வாடகைக்கு கொடுக்க கூடிய இடங்கள் இல்லாமல் வாடகைக்கு போகாத நிலையில் உள்ளது. ஆகவே, அரசு வாகனம் நிறுத்துவதற்கு என இடவசதியை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும். மேலும் வரக்கூடிய வாகனங்களின் இடையூறுகளை சீர் செய்வதற்கு என போதுமான அளவிற்கு போக்குவரத்து போலீசாரை அதிகப்படுத்தி தர வேண்டும்.
அதேபோல, நகை அடகு வைத்தவர்களுக்கு அதனை திரும்பப் பெறுவதற்கு பல்வேறு சட்டங்கள் போடப்பட்டுள்ளன. அந்த சட்டத்தை கட்டாயம் திருத்தம் செய்ய வேண்டும். வருகிற ஜூலை 22, 23 ஆம் தேதிகளில் மாநிலத்தினுடைய செயற்குழுக் கூட்டம் கொடைக்கானலில் நடைபெற உள்ளது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்த அரசு முறைப்படுத்த வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்களை எடுக்க இருக்கிறோம்.
மேலும், கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தையும் அறிவிப்பதற்கு தயாராக இருக்கிறோம். வணிகர்களின் பாதுகாப்பு என்பது பல இடங்களில் அச்சுறுத்தல்கள் இருந்தாலும் போர்க்கால அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அரசியல் கட்சிகள் மாநாடு, கூட்டங்கள் நடத்தும்போது அந்தப் பகுதியில் உள்ள கடைகளை மூட சொல்லும் நிலைபாட்டினை திரும்ப பெற வேண்டும்.
கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பதை முறைப்படுத்தி வருகின்றோம். இதற்காக அரசும், பேரமைப்பு நிர்வாகிகளையும் இணைத்து கொண்டு கமிட்டி அமைத்து வருகிறது. கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் தான் இருக்க வேண்டும் என்பதில் 100 சதவீதம் வணிகர் பேரமைப்பு உறுதியாக உள்ளது. அதற்கான பணி விரைந்து நடைபெறும்.
மேலும், தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும் போலீசார் இரவு 10, 11 மணிக்கும் கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக வேறுபடுவதை ஏற்க முடியாது. இது சம்பந்தமாக காவல் துறை இயக்குனரை மீண்டும் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். திறந்து இருக்கின்ற கடைகளுக்கு பாதுகாப்பு தர வேண்டுமே தவிர கடைகளை மூடுங்கள் என்ற வாசகம் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
பேட்டியின்போது, தலைவர் எம்.மண்ணுலிங்கம், செயலாளர் பி.நாகராஜ், பொருளாளர் பி.கணேசன், நிர்வாக செயலாளர் ஜி.அன்பு, செய்தி தொடர்பாளர் எஸ்.முரளிதரன், மாநில இணைச் செயலாளர் பி.செந்தில்மாறன், முன்னாள் திருவண்ணாமலை தாலுகா வியாபாரிகள் சங்கச் செயலாளர் தி.சித்தார்த்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications